விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்து வருகிறது.
நேற்றைய பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியிடம் டாக்டர் டிஎன்ஏ ரிசல்ட் பற்றி சொல்லியதும் அதிர்ச்சியடைந்த பாரதி இத்தனை நாளாக நான் கண்ணம்மாவை தப்பாக நினைத்து மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன். எந்த மூஞ்சியை வைத்து கொண்டு கண்ணம்மாவை பார்ப்பேன் என் வேதனையில் இருக்க மறுபுறம் ஹேமா அப்பாவை கேட்டு கண்ணம்மாவை கேள்வியால் துளைக்கிறாள். இத்துடன் நேற்றைய எபிசோட் முடிந்தது.
இன்றைய எபிசோட்டில் சௌந்தர்யா கணவரிடம் ஹேமாவை பற்றி வருத்தப்பட்டு பேசுகிறார். பாரதிக்கு போன் செய்து பார்க்க மறுபடியும் சுவிட்ச் ஆப் செய்பட்டுள்ளதாக வரவும் மிகுந்த கோபம் அடைகிறார் சௌந்தர்யா. எங்க தான் இந்த பாரதி போய் தொலைஞ்சானோ தெரியல. பழைய சௌந்தர்யாவா என்ன பார்க்க போறான். அவன் வாயாலேயே ஹேமா லட்சுமி என்னோட குழந்தைகள் தான்னு சொல்ல வைப்பேன். உடனே அஞ்சலி நீங்க செய்யுங்கள் எங்கள் அனைவரின் சப்போர்ட்டும் உங்களுக்கு இருக்கும் என கூறூகிறார்.
லட்சுமி கண்ணம்மாவிடம் ஏன் ஹேமாவுக்கு அப்பா யாருனு உண்மை தெரிய கூடாதுனு சொல்லறீங்க? உங்க இரண்டு பேருக்கும் நடுவுல என்ன பிரச்சனை ஏன் இரண்டு பேரும் பிரிஞ்சு இருக்கீங்க? ஏன் எங்க இரண்டு பேரையும் அவரோடு குழந்தைகளா ஏத்துக்க மாட்டேன் என சொல்றாரு? என அடுத்தடுத்து கேள்விகளால் கண்ணம்மாவை கேட்க பதில் சொல்ல முடியாமல் தவிப்பில் லக்ஷ்மியை அடிக்க கை ஓங்குகிறார் கண்ணம்மா. உங்கள் அனைவரின் கேள்விகளையும் நான் எப்படி சமாளிப்பது என கண்கலங்குகிறார்.
மறுபுறம் பாரதி சௌந்தர்யாவிற்கு போன் மூலம் டிஏன்ஏ ரிசல்ட் குறித்து சொல்வதற்காக கால் செய்கிறார். போனை எடுத்த சௌந்தர்யா மிகுந்த கோபத்தில் ஹேமாவிற்கு நடந்த அனைத்தையும் பற்றி சொல்கிறார். இன்னும் கூட என்னோட அப்பா யாருனு சொல்லுங்க என கேட்டு கொண்டே இருக்கிறாள். அவளுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது என தெரியவில்லை என சௌந்தர்யா சொன்னதும் பதறிய பாரதி இன்னும் நான்கே மணி நேரத்தில் நான் அங்கு இருப்பேன். நீங்கள் எந்த ஹாஸ்பிடலில் இருக்கிறீர்கள் என கேட்டு கொள்கிறார் பாரதி.
நீ எதற்காக டெல்லிக்கு போன போன் ஏன் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சு இருந்த என சௌந்தர்யா கேட்க என்னோட சூழ்நிலை அப்படி இருந்தது. இதை பத்தி எதுவும் என்கிட்டே கேட்காதீங்க என பாரதி கூறுகிறார். நேரில் வந்ததும் எல்லாத்தையும் சொல்கிறேன் என கூறி என்னோட வாழ்க்கையில இத்தனை நாளாக இருந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு வந்துவிட்டது என கூறிவிட்டு போனை வைக்கிறார் பாரதி. வேகவேகமாக சென்னைக்கு பாரதி கிளம்புவதோடு இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளை பார்க்கலாம்.