பாக்கியலட்சுமி சீரியலில் 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.


அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.


குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.


கடுப்பான ராதிகா 


ராதிகாவுக்கும் இனியாவுக்கும் நடந்த சண்டையை சமாளிக்க முடியாமல் கோபி திணறுகிறார். அப்போது இனியா உங்களுக்கு நான் முக்கியமா? இல்ல ராதிகா முக்கியமா? என இனியா கேட்க எனக்கு நீதான்டா ஃபர்ஸ்ட் என  கோபி சொல்ல ராதிகா ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கிறார். மேலும் ராதிகாவிடம் குழந்தைகிட்ட இப்படி பேசுறது தப்பு என சொல்ல, ஆமா நான் தான் தப்பு. உங்க வீட்டுல இருந்து வந்து திட்டுவாங்க. இவளும் திட்டுவா. இதெல்லாம் கேட்டுட்டு இருக்க நான் தான் தப்பு என டென்ஷனாகி ரூமுக்குள் செல்கிறார். நடந்ததை பார்த்து பயந்து போன மயூவை கோபி சமாதானம் பண்ணும் நிலையில் ராதிகா வெளியே வந்து அவரையும் உள்ளே அழைத்து செல்கிறார்.


கவலைப்படும் பாக்யா 


ராமமூர்த்தி பாக்யா வீட்டுக்கு வருகிறார்.அவரிடம் இப்ப மட்டும் எதுக்கு இங்க வர்றீங்க என ஈஸ்வரி கேட்க, எழில் பாட்டி இவ்வளவு நேரம் உங்களுக்காக தான் காத்துகிட்டு இருந்தாங்க என உண்மையை போட்டுடைக்கிறார். பின்னர் ராமமூர்த்தி  இனியாவின் டூர் பற்றி பேசுகிறார். அப்போது பாக்யா யாரெல்லாம் போறாங்க? போன் கொண்டு போலாமா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு கவலையடைகிறார். நீ இப்படி இருக்க..ஆனால் கோபி டூர் பற்றி பேசுனதும் எவ்வளவு காசு வேணும்ன்னு மட்டும் தான் கேக்குறான் என ராமமூர்த்தி அந்த வீட்டில் நடந்ததை சொல்கிறார். 


இதனையடுத்து உடன் வேலை பார்க்கும் பெண்ணின் மகனை நாய் கடித்து விட்டதாகவும், ஏரியாவில் நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது எனவும் சொல்லி ஏரியா செகரட்டரியிடம் சொல்லப் போகும் பாக்யாவுக்கும், செகரட்டரிக்கும் இடையே வாக்குவாதம் எழுகிறது. தேர்தல் வரட்டும். அங்க பாத்துக்குறேன் உங்களை என சவால் விட்டு விட்டு பாக்யா கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார். 


கோபி - ராதிகா சண்டை 


இனியா ஸ்கூலுக்கு கிளம்ப, கிச்சனில் இருக்கும் ராதிகாவை பார்க்க கோபி செல்கிறார். தன்னை தொடவும் கோபி கையை ராதிகா தட்டி விடுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் அவர் ஏன் இப்படி பண்ற என கேட்கிறார். ப்ளீஸ் கிளம்புங்க கோபி என கையெடுத்து கும்பிடுகிறார். நான் என்ன பண்ணேன்? ஏன் என்மேல இவ்வளவு கோபமா இருக்க என கேட்க, நேத்து நடந்தது எல்லாம் நியாபகம் இல்லையோ என ராதிகா தெரிவிக்கிறார். 


நேத்து நடந்ததை நீ இன்னும் மறக்கலையா என கோபி சொல்ல, என்ன நடந்தாலும் நான் மறக்கணுமா? நீங்க பேசுனது கொஞ்சமாவது நியாயமா? இனியா தப்பு பண்ணா என்ன கண்டிக்குறீங்க. எனக்கு இதெல்லாம் தேவைதான் என ராதிகா கொந்தளிக்கிறார். பின்னர் மயூவிடம் தன் கோபத்தை காட்ட கோபி ஏன் இப்படி பண்ற என கேள்வியெழுப்புகிறார்.


மயூ ஏன் பொண்ணு தானே. எனக்கு திட்டுற உரிமை இருக்கு என ராதிகா கோபத்தில் பேச  ஏன் இப்படி பிரிச்சி பேசுற என கோபி பேசுகிறார். இதனையடுத்து இனியாவை ஸ்கூலில் விட கோபி போன நிலையில், ராதிகாவிடம் பெரியவங்க போடுற சண்டையில பிள்ளைங்க பாதிக்கப்படக்கூடாது என ராமமூர்த்தி அட்வைஸ் பண்ணுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.