பாரதி கண்ணம்மா சீரியல் இன்னிக்கிக்கு ரொம்ப விறுவிறுப்பா போகுது. பாரதி நேத்து எபிசோட்ல ஹேமா ஒரு ஆதரவற்ற இல்லத்துல இருந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தை. அவளோட அம்மா எப்படி இருப்பாங்கனு என்னக்கு எப்படி தெரியும்? அவளோட கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாததால காலேஜ்ல லவ் பண்ண பொண்ணோட போட்டோவ ஹேமாவோட அம்மானு காமிச்சேன். அவளோட நியாபகமா என்னோட பொண்ணுக்கு ஹேமானு பேர் வைச்சதா சொல்லறாரு பாரதி. நான் யார வேணும்னாலும் ஹேமாவோட அம்மானு சொல்லுவேன் உன்னக்கு என்ன வந்தது என்ன உரிமை இருக்கு என்று கண்ணம்மாவிடம்  கேட்கிறார். 


இதை எல்லாம் கேட்ட கண்ணம்மா கடுப்பாகி,  இதை கேக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இனிமேல் யாருக்காகவும் எதற்காகவும் நான் உண்மையை மறைக்க போவது இல்லை. மாமியார் சௌந்தர்யா கண்ணம்மாவை கொஞ்சம் பொறுமையாக இருக்க சொன்னவுடன், நீங்க என்னோட இடத்தில இருந்த இப்படி தான் அமைதியா இருப்பீங்களா? அப்படினு கேக்குறாங்க கண்ணம்மா. பிறகு சௌந்தர்யா கண்ணம்மா அனைத்து உண்மையையும் சொல்லறதுக்கு கண்ணம்மாவை அனுமதிக்கிறார். 


ஒரு அம்மாவா கண்ணம்மாக்கு எல்லா உரிமையும் இருக்கு அதனால   சௌந்தர்யா, வேணு, அகில் என அனைவரும் கண்ணம்மாவிற்கு சப்போர்ட் செய்கிறார்கள். கடுப்பான பாரதி இது என்ன புது ட்ராமாவா என்று கேட்கிறார். கண்ணம்மா எனக்கு ஹேமாவோட அம்மா யாருனு தெரியும். நான் தான் ஹேமாவோட அம்மானு சொன்னதும் பாரதி அதை மறுக்கிறார். 


இதை கேட்டதும் சிவகாமியின் குடும்பம் அதிர்ச்சி அடைகிறது. வெண்பா தான் எங்கே மாட்டிக்கொள்ள போகிறோம் என்ற பயத்தோடு இருந்தாள். கண்ணம்மா தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாகவும் அதில் ஒரு குழந்தையை சௌந்தர்யா எடுத்து கொண்டு வந்து பாரதியிடம் கொடுத்ததாக சொல்கிறார். உடனே பாரதி குறுக்கிட்டு கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்த்தது நான் தான் நான் இதை நம்ப மாட்டேன் என்கிறார். 






கண்ணம்மா, வெண்பா தனக்கு விஷ ஊசி போட்டு என்னை கொல்ல பார்த்தாள் அப்போது துர்கா தான் தன்னை காப்பாற்றியதாகவும், இல்லை என்றால் அன்றே நான் இறந்திருப்பேன் என்றும் கண்ணம்மா கூறுகிறார். 


வெண்பா, தான் எதுவும் செய்யவில்லை என்று மறுக்க, பாரதியும் இதை எதையும் நம்பவில்லை என்று வெண்பாவிற்கு சப்போர்ட் செய்கிறார். இருவரின் நட்பை கொச்சைப்படுவதற்காக இதை சொல்கிறாய் நான் உன்னை நம்பப்போவதில்லை என்கிறார். 
 
வெண்பா ஒன்னுமே செய்யாதது போல் நடித்து பாரதியை மறுபடியும் ஏமாற்ற பார்க்கிறார். என்னை நம்ப போவதில்லை ஆனால் உங்கள் அம்மாவையும் நம்புவீர்களா என்று கேட்கிறார். பாரதி சௌதர்யாவுடன் சென்று அவள் சொல்வது எல்லாம் பொய் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சுகிறார். 


சௌந்தர்யா பாரதியின் மன்னிப்பு கேட்டு கண்ணம்மா சொல்வதெல்லாம் உண்மை என்றார். இதை கேட்ட பாரதி அதிர்ச்சி அடைகிறார். தான் இந்த உண்மையை மறைக்காமல் இருந்தால் ஹேமா மீது நீ வெறுப்பை காட்டுவாய், அவளையும் நீ ஒதுக்கி விடுவாய் என்று தான் உண்மையை மறைத்ததாக கூறுகிறார் சௌந்தர்யா. கண்ணம்மா தனது மகளை தன்னிடம் இருந்து பிரித்ததற்காக சௌந்தர்யா மீது கோபத்தை காட்டுகிறார்.  இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது. நாளை என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.