Baakiyalakshmi serial August 23 :  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 23) எபிசோடில் ஈஸ்வரி 12 மணி ஆனதும் ராமமூர்த்திக்கு வாழ்த்து சொல்வதற்காக தூங்காமல் காத்திருக்கிறார். 12 மணி ஆனதும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி சாக்லேட் கொடுக்கிறார். ராமமூர்த்தியும் முதல்முறையாக ஈஸ்வரி இது போல வாழ்த்து சொன்னதால் மிகவும் சந்தோஷப்படுகிறார். இருவரும் சந்தோஷமாக சிரித்து பேசி கொண்டு இருக்கிறார்கள்.