பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டும் என சொல்லி பாக்யாவுக்கு கோபி போன் செய்யும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள்.  இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 




போஸ்ட் பிரச்சனை 


கோபிக்கு வந்த போஸ்ட்டை அப்படி யாரும் இந்த வீட்டில் இல்லை என போஸ்ட்மேனிடம் ராமமூர்த்தி கூறி அனுப்பி விடுகிறார். வெளியே வரும் அவரை கோபி பார்க்க தனக்கு போஸ்ட் வந்ததா என விசாரிக்கிறார். அப்போது வீட்டுக்கு போனது, அப்படி யாரும் இல்லை என சொன்னது என்று அத்தனையும் போஸ்ட்மேன் சொல்ல, அதைக்கேட்டு இதெல்லாம் ரொம்ப டூ மச் என கோபி கொந்தளிக்கிறார். இதன்பிறகு எந்த லெட்டர் வந்தாலும் அந்த வீட்டுக்கு வந்து கொடுங்க என கோபி சொல்ல, போஸ்ட்மேன் ஏன் நீங்க அந்த வீட்டுல இல்லை என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.


பின் வீட்டுக்கு சென்று டல்லாக அமரும் அவரை கண்டு ராதிகா என்னவென்று விசாரிக்க நடந்ததையெல்லாம் கோபி சொல்கிறார். இதுக்குதான் அட்ரஸை மாத்தலாம்ன்னு சொன்னேன். அதுமட்டுமல்ல புது ரேஷன் கார்டு வாங்கிடலாம். எனக்கும் அட்ரஸ் ப்ரூஃப் இல்ல. ஆக இப்படி ரேஷன் கார்டு வாங்கலாம் என ராதிகா சொல்ல முதலில் யோசிக்கும் கோபி பின் சம்மதிக்கிறார். அதுக்கு முதல்ல அந்த வீட்டு ரேஷன் கார்டுல இருந்து உங்க பேரை நீக்கணும் என ராதிகா சொல்ல கோபி அதிர்ச்சியடைகிறார். 


அங்க போய் எப்படி ரேஷன் கார்டு வாங்க, சும்மா போனாலே பக்கம் பக்கமா பேசுவாங்க என கோபி புலம்ப, நீங்களே வேணாம்ன்னு சொன்ன அந்த வீட்டு ரேஷன் கார்டுல உங்க பேர் மட்டும் எதுக்கு என ராதிகா சொல்ல பாக்யாவுக்கு போன் செய்கிறார். 


கோபியை டென்ஷனாக்கிய பாக்யா 


பாக்யாவிடம் போஸ்ட் லெட்டர் வாங்காதது பற்றி கோபப்படும் கோபி, அட்ரஸை மாத்தப் போறதா சொல்கிறான். ஆனால் நக்கலாக பாக்யா நான் கேட்டரிங் சர்வீஸ் நடந்துறேன். நீங்க தப்பான நம்பருக்கு கால் பண்ணிருக்கீங்கன்னு நினைக்கேன் என சொல்ல கோபி ரொம்ப டென்ஷனாகிறார். இப்ப ரேஷன் கார்டு கொடுக்க முடியுமா முடியாதா என கேட்க அதெல்லாம் மாமா கிட்ட இருக்கு என பாக்யா சொல்லிவிட்டு பாக்யா போனை கட் பண்ணி விடுகிறார். கோபிக்கு அருகிலிருந்து அத்தனையையும் கேட்கும் ராதிகா, ரேஷன் கார்டை அப்பா,அம்மா கிட்ட கேட்காம ஏன் பாக்யா கிட்ட கேட்டு பொண்டாட்டியோட சண்டை போடுற மாதிரி பேசுறீங்க என சொல்லிவிட்டு கோபத்துடன் அங்கிருந்து செல்கிறார். போனையும் பண்ண சொல்லிட்டு இப்படியும் சொல்றாளே என கோபி மாட்டிக்கொண்டு தவிக்கிறார். 


உறுதியாக சொன்ன எழில் 


அம்ரிதா வீட்டுக்கு செல்லும் எழிலிடம் அவரின் அம்மா, அப்பா உங்க வீட்டுல இருந்து யாராவது வந்து உத்தரவாதம் கொடுக்க சொல்லுங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் உங்க வீட்டுல நடக்குறதை பார்த்த கொஞ்சம் பயமா இருக்குன்னு சொல்ல சரி வீட்ல இருந்து பேச சொல்றேன் என எழில் சொல்வது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.