பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை அவரது குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்க ராதிகா அம்மா முடிவு செய்யும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றது. கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்தது, இருவரும் திருமணத்துக்கு தயாரானது, கோபி குடும்பத்தினர் முயற்சித்தும் திருமணம் நடந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
இனிமே ராதிகா குடும்பம் மட்டும் தான்
கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்கு வந்ததும் ராதிகா தன் ரூமுக்குள் செல்ல கோபியை சுற்றி இருந்தவர்களும் சென்று விட தனியாளாய் நடுவீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தன் நிலையை எண்ணி நொந்து போகிறார். என்ன நடக்குது இங்க...தனியா வேற உட்கார வச்சிட்டு போய்டாங்க...எல்லாரும் தூங்கிட்டாங்களா..நீ புதுசா கல்யாணம் ஆன பழைய மாப்பிள்ளை தான்..இன்னிக்கு நாம தனியா தான் தூங்கணும் போல என நினைத்து கொண்டிருக்கையில் ராதிகாவின் அம்மா, அண்ணன் சந்துரு கோபியை சந்திக்க வருகின்றனர்.
அவர்கள் கல்யாண மண்டபத்தில் நடந்த சம்பவங்களை சொல்லி நடந்தது எல்லாம் விடுங்க. ஆனால் இனிமேல் நடக்காம பார்த்துக்கோங்க என சந்துரு சொல்கிறார். அதன் பின்னர் ராதிகா அம்மா பேச, நானே ஒரே பையன் அதனால அவங்க அப்படி நடந்துகிட்டாங்க என ஏதேதோ சொல்லி கோபி சமாளிக்கிறார். ராதிகா இனிமேல் வருத்தப்படக்கூடாது என சந்துரு சொல்ல சரி நான் பார்த்துக்குறேன் என கோபி கூறுகிறார்.
மயூ இனிமேல் உங்க பொண்ணு. அவளை நல்லா பார்த்துக்கோங்க என ராதிகா அம்மா சொல்ல, நான் என் பொண்ணு மாதிரி பார்த்துக்குறேன் என கோபி தெரிவிக்கிறார். இனிமேல் மனைவின்னா ராதிகா மட்டும் தான்..குழந்தைன்னா மயூ மட்டும் தான். வேற யாரும் இல்ல. இனிமேலும் இது மட்டும் தான் உங்க குடும்பம். இனி 2 குடும்பம்லா இல்ல என ராதிகா அம்மா தெரிவிக்க கோபி ஆடிப்போகிறார்.
கதறி அழும் ராதிகா
முதலிரவு அறையில் கோபி காத்திருக்கும் நிலையில் அங்கு வரும் ராதிகா மண்டபத்தில் நடந்த சம்பவங்களால் தன்னுடைய இமேஜ் போய்விட்டதாக சொல்லி அழுகிறார். இருவரும் தூங்கப் போகும் நிலையில் இனியாவிடம் இருந்து கோபிக்கு போன் வருகிறது. முக்கியமான கால் என சொல்லிவிட்டு வெளியே சென்று பேசும் கோபியிடம், நான் உங்களை வெறுக்குறேன். இனிமேல் நீங்க தேவையில்ல என இனியா சொல்கிறார். அவரை சமாதானப்படுத்தும் கோபியை கண்டு ராதிகா அம்மா டென்ஷனாகிறார்.
ராதிகாவை அழைத்து சீக்கிரம் கட் பண்ணிவிடு. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல என சொல்ல அவரோ அம்மாவை சமாதானப்படுத்துகிறார். பின்னர் ராதிகாவிடம் கோபி இனியா தான் போன் பண்ணா. நான் கொஞ்சம் அப்செட் ஆகிட்டேன். முகம் கழுவி விட்டு வர்றேன் என சொல்லி விட்டு செல்கிறார். அதற்குள் மயூ நான் உங்களோடு தான் தூங்குவேன் என அடம்பிடித்து ராதிகாவிடம் அடம் பிடிக்கிறார்.
முகம் கழுவி விட்டு வரும் கோபிக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.