பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கிளம்பிய பாக்யா கிளம்பி செல்லும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகிறது. 


ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


ஹேப்பி நியூஸ் சொன்ன எழில் 


பாக்யா எழிலுக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறார். அப்போது அங்கு வரும் எழில் முகத்தில் தெரியும் சந்தோஷத்துக்கான காரணம் என்ன என்பதை கேட்கிறார். அதற்கு தனக்கு மீண்டும் தயாரிப்பாளர் பட வேலையை ஆரம்பிக்கச் சொல்லி சம்மதம் தெரிவித்ததாக கூறுகிறார். இதைக் கேட்டு மகிழ்ச்சியடையும் பாக்யா பின்னர் சாப்பிடும் போது தான் சமையல் ஆர்டருக்கு செல்வதால் 2 நாட்களுக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கிறார். எழிலும் சரி நான் பார்த்துக்கிறேன் என சொல்லிவிட்டு, அம்ரிதாவுக்கு போன் செய்கிறார்.


சந்தேகப்படும் அம்ரிதா 


லேட் நைட்ல எதுக்கு போன் பண்ணீங்க என கேட்கும் அம்ரிதாவிடம், தயாரிப்பாளர்  படத்துக்கு ஓகே சொன்னதையும், அவரது மகள் வர்ஷினி தான் காரணம் எனவும் சொல்லி போனை வைக்கிறார். ஆனால் வர்ஷினியோடு பைக்கில் சென்றதை ஏன் எழில் சொல்லவில்லை என அம்ரிதா சந்தேகப்படும் வேளையில், மீண்டும் போன் செய்து இன்னைக்கு உங்க வீட்டு வழியாக வந்தேன். தயாரிப்பாளர் பொண்ணு கார் வரல. அதனால கொண்டு வந்து விட்டேன். அப்படியே வீட்டுக்கு வரலாம்ன்னு நினைச்சேன். ஆனால் லேட் ஆனதால வரல. அதான் இப்ப போன் பண்ணேன் சொல்றேன் என கூறி சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான். மறுநாள் காலையில் பயத்துடன் இருக்கும் பாக்யாவுக்கு தைரியம் கொடுத்து இந்த ஆர்டரை நீ சூப்பரா பண்ணுவ என சொல்லி ஊக்கப்படுத்துகிறான். 


கோபியிடம் கோபப்படும் ராதிகா அம்மா 


கோபியுடனான திருமணம் நல்லபடியா நடக்குமா என யோசிக்கும் ராதிகாவுக்கு அவரது அண்ணன் சந்துரு, அம்மா இருவரும் ஆறுதல் சொல்கிறார்கள். அப்போது கோபி அங்கு வருகிறார். அவரிடம் ராதிகா அம்மா, உங்க வீட்டுல யாருக்காவது சொன்னீங்களா என கேட்கிறார். அதற்கு அம்மாவிடம் சொன்னேன் என சொல்ல அதைக்கேட்டு ராதிகா அம்மா டென்ஷனாகிறார். அவர் ஒருத்தரே போதும். என்ன பிரச்சனை பண்ண போறாங்களோ  என புலம்ப, எனக்கு விவாகரத்து ஆயிடுச்சி. யாரும் என் விஷயத்துல தலையிட முடியாது. என்ன நடந்தாலும் இந்த கல்யாணம் நடக்கும் என கோபி உறுதியளிக்கிறார். பின்னர் அனைவரும் மதியம் மண்டபத்துக்கு போகலாம் என முடிவு செய்கின்றனர். 


மண்டபத்துக்கு புறப்படும் பாக்யா 


கோபியின் திருமண ஆர்டர் என தெரியாமலேயே அங்கு சமைக்க செல்வியுடன் பாக்யா புறப்பட தயாராகிறார். அவருடன் நானும் போவேன் என அடம்பிடித்து ஜெனி செல்கிறார். மேலும் போகும் போது மாமா ராமமூர்த்தி, மாமியார் ஈஸ்வரியிடம் ஆசீர்வாதம் வாங்குகிறார். அப்போது ஈஸ்வரி, கோபி வேற கல்யாணம் பண்ணப்போறானே..நீ என்னடான்னா சமைக்க போறேன்னு சொல்றீயே என நினைத்து வருத்தப்படுகிறார். பின்னர் அங்கிருந்து ஆட்டோ கிடைக்காததால் செல்வி, பாக்யா, ஜெனி 3 பேரும் ஒரே பைக்கில் செல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.