பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து வழங்க கோபியை பாக்யா கோர்ட்டுக்கு அழைக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரம் முழுக்க வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வந்து சமாதானப்படுத்துவது, பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது போன்ற காட்சிகள் ஒளிபரப்பானது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
வீட்டுக்கு வரும் பாக்யாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், கோபியை இனி கண்காணிக்க வேண்டும் என குடும்பத்தினரிடம் ஈஸ்வரி கூறுகிறார். கோபியோ பாக்யா ஏன் திரும்பி வந்தார், அடுத்து என்ன செய்யப் போகிறாரோ என பயத்தில் முழிக்கிறார். ஆனால் பாக்யா வீட்டுக்கு வந்ததில் வேலைக்காரி செல்வி கோபப்படுகிறார். இதுகுறித்து தனது ஆதங்கத்தை ஜெனியிடமும், எழிலிடமும் கூறுகிறார். அதற்கு எழில் அம்மா வேறு ஏதோ திட்டத்தோடு வந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
எதிர்பார்த்தது போலவே ஏற்கனவே கோபி-பாக்யா இடையேயான விவாகரத்துக்காக கடைசியாக இருவரும் கோர்ட்டுக்கு வரும்படி லெட்டர் வந்திருந்தது. அதனை கையில் எடுத்த பாக்யா கோபியை கோர்ட்டுக்கு அழைக்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. ஏற்கனவே பாக்யாவை கழட்டிவிடும் முடிவில் தான் கோபி உள்ளார். இப்போது தன்னை பழிவாங்க பாக்யா களமிறங்கியுள்ளதால் கோபியின் எண்ணம் நிறைவேறுமா என்பது வரும் நாட்களில் ஒளிபரப்பாகும் எபிசோட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்