பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கும் அவரது மகள் இனியாவுக்குமிடையேயான உரையாடல் தொடர்பான காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


வீட்டை விட்டு வெளியேறி தனது ஆபீஸிற்கு சென்ற பாக்யா அங்கும் பேசாமல் அமைதியாக இருக்க அவருக்கு வேலைக்காரி செல்வியும், மகன் எழிலும் ஆறுதல் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தனது பிள்ளைகள் இவ்வளவு நேரம் வராததால் பயப்படுவார்கள். அதனால் வீட்டுக்கு சென்று அவர்களை பார்த்து விட்டு வருகிறேன் என கூறி செல்வி அங்கிருந்து கிளம்புகிறார். பின் தனது செல்போனை எடுக்க பாக்யா வீட்டுக்கு செல்கிறார். அங்கு அவரது குடும்பத்தினர் பாக்யா எங்கு சென்றார் என தெரியாமல் பரிதவிக்கின்றனர். வீட்டிற்கு வரும் செல்வி பாக்யா ஆபீஸிற்கு சென்றதையும், அவர் பேசாமல் இருப்பதாகவும் கூறிவதால் அனைவரும் கவலையடைகின்றனர். கோபியின் அம்மா ஈஸ்வரி செல்வியிடம் பாக்யாவுடன் இருக்குமாறும் ,எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறார். 


இதனையடுத்து தனது அறையில் இருக்கும் கோபியை மகள் இனியா சந்தித்து நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் நினைக்கல..உங்களைப் பத்தி நான் என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட பெருமையா பேசுனேன்.ஆனால் இப்படி பண்ணீட்டிங்க என சொல்லி அழுகிறார். அப்போது முன்பு ஒரு சமயத்தில் நானும், அம்மாவும் பிரிந்து போய் விட்டால் நீ யாருடன் இருப்பாய் என கோபி கேட்க அதற்கு இனியா நான் உங்களுடனே வந்துடுவேன் என சொல்லும் சம்பவம் இனியாவுக்கு நினைவுக்கு வருகிறது. அதனை சொல்லி அப்ப எல்லாம் உங்க திட்டம் தானே..எனக்கு உங்களை பிடிக்கல...எனக்கு இந்த குடும்பம் தான் முக்கியம்.. நீங்க கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன்..இனி உங்க கூட பேசமாட்டேன் என சொல்லி விட்டு செல்கிறார். இதைக் கேட்டு கோபி அதிர்ச்சியடைகிறார். 


இதனைத் தொடர்ந்து ஈஸ்வரியும், மூர்த்தியும் நடந்த பிரச்சனைகளால் சாப்பிட மாட்டேன் என கூறுகின்றனர். அவர்களை கோபியின் மூத்த மருமகள் ஜெனி சமாதானப்படுத்துகிறார். அங்கு வரும் மூத்த மகன் செழியன் நடந்த பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என தெரியவில்லை என வருத்தப்படுவதுடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. மகன் இனியா மீது மிகுந்த அன்பு கொண்ட நிலையில், அவரே கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன் என வெறுப்போடு சொல்லிவிட்டதால் கோபி ராதிகாவுடன் வாழ்வது குறித்த தனது முடிவை மாற்றுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண