பாக்கியலட்சுமி சீரியலில் விபத்தில் சிக்கிய கோபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவரைப் பற்றிய உண்மையெல்லாம் பாக்யா வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, கோபியின் மீதான சந்தேகத்தால் அவரது போனை பாக்யா சோதனை செய்தது. ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உண்மை பாக்யாவுக்கு தெரிந்தது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என பார்க்கலாம்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குள் வரும் கோபியை பாக்யா முறைத்து பார்த்து அவரை தடுத்து நிறுத்துகிறார். இதனைப் பார்த்து வீட்டில் உள்ள மற்ற அனைவரும் மருத்துவமனையில் இருந்தது, பில் கட்டியது எல்லாம் மனைவின்னு சொன்னாங்களே அப்படி என சொல்கிறார்கள். அதற்கு பாக்யா மனைவின்னு சொன்னாங்களே...பாக்கியலட்சுமின்னு சொன்னாங்களா என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்ப வீட்டில் உள்ள அனைவரும் குழம்பி போகின்றனர். தான் மருத்துவனைக்கு சென்றது, அங்கு நர்ஸ் இன்னொரு பெண்ணைப் பற்றி தன்னிடம் தெரிவித்தது, கோபி அனுமதிக்கப்பட்ட அறைக்குள் சென்ற போது அவர் இன்னொரு பெண்ணின் கைப்பிடித்து “நீ இல்லாவிட்டால் உயிரோடு இருக்க மாட்டேன்” என கூறியது அனைத்தையும் பாக்யா போட்டுடைக்கிறார்.
இதைக் கேட்டு கோபி மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் ஆடிப் போகின்றனர். கோபியின் அப்பா மூர்த்தியும் அவரிடம் நீ சொல்றியா..இல்லை நான் சொல்லட்டுமா என கேட்கிறார். கோபிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பாக்யா தன் மாமியார் ஈஸ்வரியிடம் உங்கள் பிள்ளையை பதில் சொல்ல சொல்லுங்கள். இதற்கு மேலும் என்னால முடியாது என சொல்ல இளைய மகன் எழிலும் எனக்கும் அப்பா செய்யும் எல்லாமே தெரியும். அவர் தப்பு பண்ணிருக்காரு. இத்தனை நாளா அம்மாக்கு தெரியக் கூடாதுன்னு தான் நாம் அமைதியா இருந்தேன். இப்ப உண்மை தெரிஞ்சிப்போச்சி என சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சியடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. நாளை ஒளிபரப்பாகும் எபிசோடில் கோபி தன் தவறை ஒப்புக்கொள்வாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் கோபி - ராதிகா இடையேயான உறவைப் பற்றி பாக்யா சொல்லிவிடுவது போல அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்