பாக்கியலட்சுமி சீரியலில் வரும் வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோட்கள் ரசிகர்களிடையே எதிர்பாராத ட்விஸ்ட்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.



இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது.


நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நடந்த சம்பவத்திற்கு கோபி தனது மூத்த மகன் செழியனிடம் மன்னிப்பு கேட்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வரும் வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில் தனது வாழ்வில் ஏற்பட்ட நம்பிக்கை துரோகத்துக்கு நியாயம் கேட்டு ராதிகா வீட்டுக்கு பாக்யா செல்லும் காட்சிகள் இடம் பெறுகிறது. அங்கு ராதிகாவிடம் கடைசியில நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்கல்ல என பாக்யா கேட்கிறார். 


அதேசமயம் மகள் இனியா கடந்த காலங்களில் தனது அம்மா பாக்யாவை மதிக்காமல் நடந்து கொண்டதை நினைத்து செழியனின் மனைவி ஜெனியிடம் அவர் வருத்தப்படுவது தொடர்பான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இதனால் வரும் வாரம் என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் வரும் வாரமும் அதனை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண