பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவை தன்னுடன் கூட்டிச் செல்லும் முடிவில் இருப்பதாக கோபி சொல்லும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


பாக்யா தனது இளைய மகன் எழிலிடம் நீயாவது என்கூட இருக்கியே என தனது கவலைகளை கொட்டுகிறார். மேலும் கல்யாணம் ஆன கொஞ்ச நாளைக்கு அப்புறம் உங்கப்பாவுக்கு என்ன பிடிக்கவே இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. ஆனாலும் மாமா, அத்தை, 3 குழந்தைகள்ன்னு அவங்களுக்காகன்னு வாழ்ந்துட்டேன். என்னை அவரு மதிக்காம ஒரு கட்டத்துல எனக்கே நமக்கு எதுவும் தெரியல போலன்னு தோணிடுச்சி என தன் வேதனையை சொல்லி புலம்புகிறார்.  இதன்பிறகு கோபி தன் நண்பருடன் பேசும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


அப்போது கோபி பாக்யாவின் எண்ணங்களை பற்றி கோபமாக பேசுகிறார். யாரை கேட்டாலும் பாக்யா அப்படி எல்லாம் பண்ணுவாரான்னு தான் கேக்குறாங்க. அந்த  அளவுக்கு அவளோட பெர்பார்மன்ஸ் இருந்திருக்கு என சொல்லும் போது மகள் இனியா போன் செய்து சாப்பிட்டாரா என்பது குறித்து விசாரிக்கிறார். இதனை எண்ணி நெகிழும் கோபி இனியாவுக்கு என் மேல் எவ்வளவு பாசம். சீக்கிரமே ராதிகாவை கல்யாணம் பண்ணிகிட்டு இனியாவை அழைத்துக் கொண்டு போயிருவேன். அப்பறம் மயூவும் இனியாவும் அக்கா தங்கச்சியா இருப்பாங்க என சொல்கிறார். இதைக் கேட்ட நண்பர் ரொம்ப ஓவரா பிளான் பண்ணாத என கோபிக்கு அறிவுரை வழங்குகிறார். 


இதனைத் தொடர்ந்து செழியன் ஜெனியிடம் பாக்யாவின் நடவடிக்கை குறித்து கடுப்பாக பேசுகிறார். அதற்கு ஜெனி செழியனை கண்டிக்கிறார். பாக்யாவா கோபியை வெளியே போக சொன்னாங்க என சொல்ல இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அப்பா தான் எல்லாமே பண்ணுவாரு. இந்த வீட்ல இத்தனை பேரு இருக்காங்க. எவ்வளவு செலவாகும்..இதெல்லாம் யார் பண்றது. நான் ஒன்னே ஒன்னு தான் சொல்வேன். நம்ம ரெண்டு பேருக்கும் என்ன செலவாகுதோ அதை மட்டும் வாங்கிக்க சொல்லு என செழியன் சொல்ல, இப்படி பேச உனக்கு அசிங்கமா இல்ல. வீட்ல என்ன வேணும், ஏது வேணும்ன்னு கடனை வாங்கி மூத்த பையனா பொறுப்பா இருப்பன்னு பார்த்தா இப்படி பேசுற என ஜெனி கூறுகிறார். 


இதனைத் தொடர்ந்து ஆபீஸ் கிளம்பும் செழியனிடம் ஈஸ்வரி இனிமேல் கோபி இடத்தில் இருந்து நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும் என சொல்கிறார். ஜெனி அதெல்லாம் செழியன் பண்ணுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு என சொல்ல, எப்படிடா இதுல இருந்து தப்பிக்கப் போறோம்ன்னு செழியன் முழிக்கிறார். இப்படியான காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.