பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து பெற்ற நிலையில் பாக்யா மீண்டும் கோபியின் வீட்டுக்கு வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் வந்து சமாதானப்படுத்தியது, குழந்தைகளுக்காக பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது, கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


ராதிகாவை பார்க்க வீட்டில் இருந்து வெளியே செல்லும் கோபியை அவரது அம்மா ஈஸ்வரி எங்கே செல்கிறாய் என கேட்கிறார். அவர் என் ஃப்ரண்டை பார்க்க செல்கிறேன் என சொல்ல, ஆணா, பெண்ணா என ஈஸ்வரி பதிலுக்கு கேட்க கோபி அதிர்ச்சியடைகிறார். என்னை சந்தேகப்படுறீங்களா என அவர் கோபத்தில் கொந்தளிக்கிறார். அதற்கு ஈஸ்வரி நீ குடும்ப பிரச்சனையை சமாளிக்க தெரியாம இருந்துருக்க. பாக்யாவுடன் இத்தனை வருஷமா குடும்பம் நடத்தியும் அவளை பத்தி புரிஞ்சிக்காம இருந்துக்க என கூறுகிறார். இப்படி பேசிக்கொண்டிருக்கையில் பாக்யா இனி வீட்டுக்கு வந்தா அவளுக்கு மரியாதை கிடையாது என தெரிவிக்கும் போது மகன் எழிலுடன் பாக்யா அங்கு வருகிறார். 


அவரை அங்கேயே நில்லு என கோபி எச்சரிக்க அதை பொருட்படுத்தாமல் வீட்டுக்குள் வருகிறார். கோர்ட்டில் நடந்ததை சொல்லிக்காட்டில் உடம்பு முழுக்க ஆணவம் இருக்கு. அதான் இப்படி எல்லாம் நடந்திருக்கா என தெரிவிக்கிறார். அவரோடு சேர்ந்து ஈஸ்வரியும் பாக்யாவிடம் ஏன் இப்படி பண்ண...என்கிட்டயோ, உங்க குடும்பத்துக்கிட்டயோ கலந்து பேசாம ஏதோ கடையில பொருள் வாங்குற மாதிரி டைவர்ஸ் வாங்கிட்டு வந்துருக்க என சொல்கிறார். கோபி தப்பு பண்ணிருக்கான். அவன் இப்ப ஒத்துக்கிட்டானே. திரும்பவும் அப்படி ஏதாவது பண்ணா சொல்லு நானே செருப்பை கழட்டி அடிக்கிறேன் என சொல்ல கோபி ஆடிப்போகிறார். காரணம் கோபி விவாகரத்து வாங்கிய கையோடு ராதிகாவை சென்று பார்த்திருந்தார். 


உடனே மூத்த மகன் செழியன்  நீங்கள் விவாகரத்து வாங்க முன்னாடியே பிளான் பண்ணிருந்தீங்க அப்படித்தானே என கேள்வி மேல் கேள்வி கேட்க பாக்யாவோ பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இதனையடுத்து ஜெனியும், மாமனார் மூர்த்தியும் பாக்யா ஏதோ சொல்ல வருகிறார். அதைக் கேட்டு பேசிக்கலாம் என தெரிவிக்கிறார்கள். இதற்கிடையில் கோபி என் வீட்டை விட்டு வெளியே போ..இது என்னோட உழைப்பு..நான் கஷ்டப்பட்டு இஎம்ஐ கட்டி வாங்கினது என சொல்ல இளைய மகன் எழில் அவரோடு சண்டைக்கு செல்கிறார். நீங்க கஷ்டப்பட்டு கட்டுனது கட்டிடம் மட்டும் தான். அதை அழகான வீட்டா மாத்துனது அம்மா தான் என சொல்கிறார். இவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. அடுத்து வரும் எபிசோடில்  பாக்யா எடுக்கப்போகும் முடிவு என்ன, அவர் ஏன் மறுபடியும் வீட்டுக்கு வந்தார் என்பதற்கான விடைகள் கிடைக்கும் என்பதால் பாக்கியலட்சுமி சீரியல் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண