விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் கோபி போனில் பேசிக்கொண்டு இருக்கிறார். "என்னோட பொண்ணையும் அம்மாவையும் நல்லபடியா வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். கார் ஓட்ட டீசல் போடணும் தெரியுமா?" என நக்கலாக கேட்கிறாள் கோபி. "பெட்ரோல் வண்டிக்கு பெட்ரோல் தான் போடணும் அது கூட உங்களுக்கு தெரியாதா?" என திருப்பி பதிலடி கொடுக்கிறாள் பாக்கியா. 



"ரொம்ப ஓவரா பேசாதா...உன்னால முடியலைன்னா சொல்லு நான் என்னோட பொண்ணையும் அம்மாவையும் பிளைட்ல வர வைக்கிறேன்" என்கிறார் கோபி. "பிளைட்ல கூட்டிட்டு போக எனக்கு தெரியாதா? இனியாவுக்கு கொடுத்து இருக்குற அசைன்மென்ட் ரோடு ட்ரிப்" என்கிறாள் பாக்கியா. "பிளைட்ல போக எவ்வளவு பணம் செலவாகும் டிக்கெட் எவ்வளவு உனக்கு தெரியுமா இடியட். உன்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா?. உனக்கு பணம் வேணும்னா கேளு நான் தரேன்" என இளக்காரமாக பேச "உங்களுக்கு பணம் வேணும்னா சொல்லுங்க நான் தரேன். நீங்க தான் இப்போ பிசினஸ் பாக்குறது இல்லையே. அதுக்கு உங்களுக்கு நேரமே இல்லையே" என சொல்லி ஃபோனை கட் செய்துவிடுகிறாள் பாக்கியா. 


 



பாக்கியா மீது இருந்த கோபத்தில் போனை தூக்கி போட்டு உடைக்க திரும்பும் கோபி, அங்கே ராதிகா நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். "நீ எப்போ வந்த? அந்த பாக்கியாவுக்கு எவ்வளவு திமிரு பாரு" என ராதிகாவிடம் சொல்கிறார் கோபி. "நான் மட்டும் பாக்கியா இடத்துல இருந்திருந்தா இதை விட மோசமா பேசியிருப்பேன். நீங்க பாக்கியாவை எப்போ விடுறீங்களோ அப்போதான் சந்தோஷமா இருப்பீங்க" என கத்திவிட்டு சென்று விடுகிறாள் ராதிகா. 


கோபியின் பிரெண்ட் இனியாவின் காலேஜ் பீஸ் கட்டுவதற்காக பணம் கொடுத்து இருந்தார். அந்த பணத்தை நண்பர் அவசர தேவைக்காக திருப்பி கேட்கிறார். ஆபிஸ் கணக்கில் பணம் இல்லாததால் பணம் கேட்பதற்காக ராதிகாவை பார்ப்பதற்காக கேன்டீன் வருகிறார். 
 
பாக்கியாவும் மற்றவர்களும் ஜாலியாக பாட்டு கேட்டுக்கொண்டே காரில் வர திடீரென ஒரு பெரியவர் வந்து கார் முன்னால் விழுகிறார். உடனே அங்கு போலீஸ் ஆக்சிடென்ட் நடந்த இடத்திற்கு விரைகிறது. பாக்கியாவிடம் லைசென்ஸ் காட்ட சொல்கிறார்கள். எங்கு தேடியும் லைசென்ஸ் கிடைக்கவில்லை. பிறகு தான் தொலைந்து போன பர்சில் லைசென்ஸ் இருப்பது பாக்கியாவுக்கு ஞாபகம் வருகிறது. போலீஸ் அவள் சொல்லும் இந்த காரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 



அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி ஃபோன் செய்ய ஈஸ்வரி அவரிடத்தில் நடந்த விஷயம் பற்றி சொல்கிறார். பழனிச்சாமி போலீஸ் அதிகாரியிடம் பேசி ஒரிஜினல் லைசென்ஸ் வீட்டில் இருக்கிறது அதை போட்டோ எடுத்து அனுப்புகிறேன் என சொல்லி கொஞ்சம் டைம் கேட்கிறார். பிறகு ராமமூர்த்திக்கு போன் செய்து நடந்த ஆக்சிடென்ட் பற்றி சொல்லி ஒரிஜினல் லைசென்ஸ் போட்டோவை அனுப்ப சொல்கிறார். அந்த நேரத்தில் கோபியும் அங்கே இருந்ததால் அவருக்கும் நடந்த விஷயங்கள் அனைத்தும் தெரிய வருகிறது. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi )எபிசோட் முடிவுக்கு வந்தது.