விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் நேற்றைய எபிசோடில் நிச்சயதார்த்த வீட்டில் பாயாசம் தீஞ்சு போனது என சொல்லி பெரிய ரகளை செய்த மாப்பிள்ளை வீட்டார் இந்த கல்யாணம் நடக்காது என சொல்லிவிடுகிறார்கள். மறுபக்கம் ஸ்கூலில் இனியாவிற்கு நடக்கும் பாராட்டு விழாவில் பாக்கியா கலந்து கொள்ளவில்லை என மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாள். இனியா மார்க் என்ன ஆனது என்பது தெரியாமல் தவிக்கிறாள் பாக்கியா. இனியாவுக்கு வாழ்த்து சொல்ல வந்த பழனிசாமி பாக்கியா மேடம் ஏன் வரவில்லை நான் போய் பார்த்து அவர்களை அழைத்து வருகிறேன் என சொல்லி ராமமூர்த்தியை அழைத்து நிச்சயதார்த்த வீட்டுக்கு செல்கிறார். அங்கே போனவர்கள் பிரச்சனை என்ன என்பதை கேட்டறிந்து மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டார்கள் என தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
மேடையில் இனியாவுக்கு மாலை அணிவித்து பாராட்டுகிறார்கள். நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பாக்கியா வந்து வேகவேகமாக இனியாவிடம் போக இனியா கோபமாக என்னை விட உனக்கு உன்னோட கேட்டரிங் பிசினஸ் தான் முக்கியம். என்கிட்டே பேசாத என கோபமாக பேச அதை பார்த்து கோபிக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. டாடி இருக்கேன் டா உனக்கு என்ன வேணும் என்றாலும் டாடியை கேளு என இனியாவை தன் பக்கம் இழுக்க பார்க்கிறார். நீங்களாவது வந்தீங்களே டாடி என இனியா கோபியை பார்த்து சொல்கிறாள்.