விஜய் டிவியின் பிரபலமான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியலட்சுமி நிச்சயதார்த்த ஆர்டர் ஒன்று கிடைத்ததற்காக அங்கே சமைக்கச் சென்று விடுகிறாள். “நிகழ்ச்சி நடக்கும் வீட்டில் இவ்வளவு லேட்டா வர்றீங்க...” என மணப்பெண்ணுடைய அம்மாவும் அப்பாவும் கேட்கிறார்கள்.
“எல்லாரும் வர ஆரம்பித்து விட்டார்கள் சீக்கிரமா வேலையை ஆரம்பிங்க” என்கிறார்கள். “சமையலில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. மாப்பிள்ளை சாப்பாட்டை மறக்கவே கூடாது” என்கிறார்கள். பாக்கியாவும் மற்றவர்களும் சென்று வேலையைத் தொடங்குகிறார்கள்.
இன்று தான் இனியாவின் 12th ரிசல்ட் காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது. ரிசல்ட் வரும்போது கண்டிப்பாக அம்மா என்னோட தான் இருக்க வேண்டும் என பல முறை பாக்கியாவிடம் சொல்லி தான் அனுப்புகிறாள் இனியா. பாக்கியாவும் “நிச்சயமாக வந்து விடுகிறேன்” என உறுதி அளித்து விட்டு தான் சென்றாள். ஆனால் வேலை முடியாத காரணத்தால் பாக்கியாவால் சொன்ன நேரத்துக்கு வரமுடியவில்லை.
அவளின் நிலை குறித்து வீட்டில் இருப்பவருக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்தாலும் போன் சிக்னல் கிடைக்காததால் மகளிடம் பேச முடியாமல் தவிக்கிறாள் பாக்கியா. அதனால் அவளால் வேலையில் கூட முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. “மணி 10.15 ஆகிவிட்டது. ரிசல்ட் வந்ததா எனத் தெரியவில்லையே!” என புலம்பிக் கொண்டே போனில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறாள் பாக்கியா.
அதைப் பார்த்த மணப்பெண்ணின் அப்பா "என்ன செல்ஃபீ எடுக்குறீங்களா. வேலையை பார்க்காமல் என்ன பண்றீங்க? அதனால் தான் பொம்பளைங்களை சமைக்க கூப்பிட வேண்டாம் என சொன்னேன்" என நொந்து கொள்கிறார்.
மறுபக்கம் அனைவரும் இனியாவின் ரிசல்டுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். மிகவும் பதட்டமாக இருக்கிறாள் இனியா. ரிசல்ட் வந்துவிட்டதா என பார்க்க இனியா போனை எடுக்க "இரு நான் பார்க்கிறேன்" என எழில் வாங்கிக்கொள்கிறான். ரிசல்ட் வந்ததும் அதைப் பார்த்த எழில் ஷாக்காகிறான். உடனே செழியன் போனை வாங்கி பார்த்து சந்தோஷப்படுகிறான். டென்ஷன் தாங்காத இனியா “என்ன மார்க் சொல்லுங்க” எனக் கேட்க செழியன் "நீ 600க்கு 596 வாங்கியிருக்க. இரண்டு சப்ஜெக்ட்ல சென்டம் வாங்கி இருக்க" என சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள்.
அம்மா இல்லையே என வருத்தப்படுகிறாள் இனியா. போன் மூலம் முயற்சி செய்து பார்த்தும் லைன் கிடைக்கவில்லை என வருத்தபடுகிறாள். பாக்கியாவும் மறுபக்கம் ரிசல்ட் வந்ததா, என்ன ஆனது என்பது தெரியாமல் பதட்டமாக இருக்கிறாள்.
அதற்குள் இனியாவுக்கு ஸ்கூலில் இருந்து போன் வருகிறது. "நீ தான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கி இருக்க. உன்னோட பேரெண்ட்ஸ் கூட்டிட்டு ஸ்கூலுக்கு உடனே வா" என்கிறார்கள். எழில் நிறைய ஸ்வீட் வாங்கி வந்து இந்த சந்தோஷமான செய்தியை ஸ்வீட் கொடுத்து மகிழ்கிறார்கள்.
தாத்தாவுக்கு ஈஸ்வரி போன் செய்து இனியாவின் மார்க் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறார். ஆனால் பாக்கியா தான் சிக்னல் கிடைக்காமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.