விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் காசிக்குச் சென்று திரும்பியுள்ள ஈஸ்வரி சாமியார் வேடத்தில் ருத்ராட்ச மாலையுடன் வந்து இறங்கியதைப் பார்த்தும் அவரின் பேச்சும் நடவடிக்கையும் பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
பாக்கியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி :
வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அமிர்தா "அம்மா காலேஜூக்கு போனதில் எல்லாருக்கும் சம்மதம் என்றாலும் இந்த விஷயம் பாட்டிக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் எனத் தெரியவில்லையே" என சொல்ல, ஜெனிக்கும் எழிலுக்கும் கூட கொஞ்சம் பதட்டமாகவே இருக்கிறது.
உடனே எழில் "நான் அம்மாவுக்கு போன் பண்ணி இதைச் சொல்றேன்" என போன் ட்ரை செய்கிறான். ஆனால் லைன் கிடைக்கவில்லை. "கிளாஸ் நடக்கும்போது போன் எடுக்கக் கூடாது" என்கிறாள் இனியா. "நான் போய் பாட்டி இப்படி வந்து இருக்கும் விஷயத்தை அம்மாகிட்ட சொல்லி அப்படியே கூட்டிட்டு வரேன்" என காலேஜுக்கு செல்கிறான்.
எழில் கொடுத்த ஷாக்:
பாக்கியாவை காலேஜில் பார்த்த எழில், பாட்டி ஊரில் இருந்து வீட்டுக்கு வந்த விஷயத்தைப் பற்றி சொல்லி அப்படியே அவங்க சாமியார் போல வந்து இறங்கி இருக்கும் விஷயத்தையும் சொல்கிறான். பயத்தில் குழம்பிப்போன பாக்கியா "பாட்டிக்கு நான் காலேஜ் போற விஷயம் தெரியுமா?" எனக் கேட்கிறாள். "இதுவரைக்கும் தெரியாது. மற்ற விஷயங்களை நாம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என சொல்லி எழில் பாக்கியவை வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.
சமாளிக்கும் ராமமூர்த்தி :
ராமமூர்த்தியிடம் ஈஸ்வரி சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போல கோபம், ஆசை இது போன்ற எந்த உணர்வும் இப்போ என் கிட்ட இல்லை என சொல்லிக் கொண்டு இருக்கிறார். வீட்டுக்கு வந்த பாக்கியா "அத்தை எப்படி இருக்கீங்க? எப்போ வந்தீங்க?" என பயந்து கொண்டே கேட்க, ஈஸ்வரி கோபமாக "நான் வந்தெல்லாம் இருக்கட்டும்... நீ எங்க போன?" என மிரட்டலாக கேட்கிறார்.
அதை சமாளிக்க ராமமூர்த்தி "ஈஸ்வரி நீ தான் கோப பட மாட்டேன் என சொன்னியே" என்றதும் ஈஸ்வரி ஆமா ஆமா என சொல்லி ஜபம் செய்கிறார் அதைப் பார்த்த பாக்கியா ஒன்னும் புரியாமல் முழிக்கிறாள். பாக்கியா காலேஜ் பற்றின விஷயத்தை சொல்லாமல் அப்படியே மறைத்துவிட்டு ஈஸ்வரியிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு சென்று விடுகிறாள்.
யோகா செய்யும் ஈஸ்வரி :
அடுத்த நாள் காலை செழியன் ஜாக்கிங் சென்று வீடு திரும்பும்போது நாடு ஹாலில் உட்கார்ந்து ஈஸ்வரி யோகா செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து ஷாக்காகிறான். பாக்கியாவையும் ராமமூர்த்தியையும் அழைத்து வந்து இதைக் காண்பிக்க, அவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்போது வரும் செல்வியும் அம்மாவுக்கு என்னவோ ஆகிவிட்டது என குழம்ப அவளை உள்ளே அழைத்து சென்ற பாக்கியா நடந்த விஷயத்தை பற்றி சொல்கிறாள்.
மிரட்டும் இனியா :
பாக்கியாவிடம் இனியா "அம்மா நீ இனிமேல் காலேஜ் வரவேண்டாம். எல்லாரும் என்னை கிண்டல் செய்றாங்க" என சொல்ல, பாக்கியா "அதெல்லாம் என்னால் முடியாது. நான் காலேஜுக்கு போவேன்" என்கிறாள். கடுப்பான இனியா "இரு பாட்டிகிட்ட நீ காலேஜ் போற விஷயத்தைப் பத்தி சொன்னா நீ வர மாட்ட இல்ல " என சொல்லி மிரட்ட பயத்தில் பாக்கியலட்சுமி என்ன செய்வது எனத் தெரியாமல் நிற்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி ((Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.