சின்னத்திரை ரசிகர்களுக்கு அடுத்த  4 நாட்கள் கொண்டாட்டம் தான். காரணம் தொடர் காரணமாக டிவியில் சூப்பர் ஹிட் படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.


பெரிய திரையைப் போல சின்னத்திரை நிகழ்ச்சிகள், படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விடுமுறை தினமோ, பண்டிகை நாட்களோ வந்தாலோ டிவியில் புதுப்படமோ, பழைய படமோ என்ன ஒளிபரப்பு செய்கிறார்கள் என்று தான் நம் கண்கள் தேடும். அப்படியாக தொடர் விடுமுறை நாட்கள் இன்று (அக்டோபர் 21) முதல் 24 ஆம் தேதி வரை உள்ளது. குறிப்பாக வரும் திங்கள் (23.10.2023), செவ்வாய் கிழமை (24.10.2023) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது.


நவராத்தி விழாவின் முக்கியமானதாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கருதப்படுகிறது. இந்த நாள்களில் சிறப்பு வழிபாடு செய்வது நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் 4 நாட்கள் விடுமுறை தினம் வருவதால் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் பல சூப்பர்ஹிட்டான பழைய படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், புதிய படங்களை சேனல் நிறுவனங்கள் ஒளிபரப்ப உள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம் 


சன் டிவி நிகழ்ச்சிகள் 


அக்டோபர் 23



  • காலை 8 மணி - வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா (சிங்க பெண்ணே ஸ்பெஷல்)

  • காலை 9 மணி - ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எல் ஸ்பெஷல் 

  • காலை 10 மணி - பேச்சில்லை வீச்சு தான் (வானத்தைபோல ஸ்பெஷல்)


படங்கள்



  • காலை 11 மணி - பேட்டை 

  •  மதியம் 3 மணி - உனக்கும் எனக்கும் 

  • மாலை 6.30 மணி - மாவீரன்

  • இரவு 10 மணி - பாரீஸ் ஜெயராஜ் 


அக்டோபர் 24



  • காலை 8 மணி - கிராமத்தில் ஒருநாள் 

  • காலை 9 மணி - உடன்பிறப்பே

  • காலை 10 மணி - செல்ல கலெக்டர் சுந்தரி 

  • மதியம் 2 மணி - எதிர்நீச்சல் கலாட்டா 


படங்கள்



  • காலை 11 மணி - சிங்கம் 2 

  • மதியம் 3 மணி - நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்


ஜீ திரை 


அக்டோபர் 23



  • நண்பகல் 12 மணி - தி கிரேட் இந்தியன் கிச்சன் 


அக்டோபர் 24



  •  நண்பகல் 12 மணி - பொம்மை நாயகி 


விஜய் டி.வி


அக்டோபர் 23



  •  காலை 10.30 மணி - மாமன்னன்


அக்டோபர் 24



  •  காலை 10.30 மணி - குட் நைட்


கலைஞர் டி.வி.


அக்டோபர் 23



  • பிற்பகல் 1.30 மணி  - விடுதலை

  • மாலை 6 மணி - லவ் டுடே 


24.10.2023



  • பிற்பகல் 1.30 மணி - அகிலன்