ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் சௌந்தரபாண்டியை சண்முகம் வீட்டிற்கு அழைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


ரூமுக்குள் இருந்து வெளியே வந்த சண்முகம் ஓவர் பில்டப் கொடுத்து பேச தங்கைகள் அவனை கலாய்க்கின்றனர். இதனை தொடர்ந்து முத்துப்பாண்டி மற்றும் சனியன் இருவரும் சேர்ந்து ஒருவழியாக சௌந்தரபாண்டியை சம்மதிக்க வைத்து சண்முகம் வீட்டுக்கு கூட்டி வர இவர்களுடன் சேர்ந்து மனோஜூம் கத்தியுடன் கிளம்பி வருகிறான். 


அடுத்து வீட்டுக்கு வந்த சௌந்தரபாண்டியை வைகுண்டம் வாங்க சம்மந்தி என்று வீட்டுக்கு அழைக்க, “அதுக்குள்ள நான் உனக்கு சம்மந்தி ஆகிட்டேனா” என்று கோபப்படுகிறார். “பாக்கியம் நம்ம பொண்ணை அவங்க எடுத்து இருக்காங்க.. அப்போ சம்மந்தி தானே, அப்படி சொன்னா குறைந்தா போயிடுவீங்க” என்று திட்டுகிறாள். 


பிறகு முத்துப்பாண்டி “எப்படியும் ரத்னா கழுத்தில் நான் தான் தாலி கட்ட போறேன், அப்புறம் அவங்க சம்மந்தி தானே” என்று சொல்ல, சௌந்தரபாண்டி “அப்படி சொல்லவே என நாக்கு கூசுது” என்று சொல்கிறார். முத்துப்பாண்டி அவரை மிரட்டி உள்ளே அழைத்து வருகிறான். பிறகு அவர் பரணியிடம் “என்னமோ 100 நாள்ல வந்துடுவேன்னு சவால் விட்ட, என்ன இதெல்லாம்?” என்று கேட்க,  “அவள் கண்டிப்பா வந்துடுவேன்” என்று சொல்கிறாள். 


வீட்டுக்குள் வந்த மனோஜ் சண்முகம் மற்றும் சூடாமணி ஒன்றாக இருக்கும் போட்டோவை பார்த்து இன்னும் கொலைவெறி அடைகிறான், பாக்கியம் சண்முகத்திடம் படையல் போட வாழையிலை கேட்க சண்முகம் அறுத்து வர தோட்டத்துக்கு செல்ல மனோஜ் அவனை பின்தொடர்ந்து செல்கிறான். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.