தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தர பாண்டி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது சௌந்தரபாண்டியை கைது செய்து ஸ்டேஷன்க்கு அழைத்து வர, எஸ்பி குற்றவாளி சௌந்தரபாண்டி தான் என அவரிடம் கையெழுத்து வாங்கி அக்யூஸ்ட் போல நடத்துகிறார். அதனை தொடர்ந்து எஸ் பி இங்கிருந்து கிளம்பி செல்கிறார். 


ஸ்டேஷனில் சௌந்தரபாண்டியுடன் இருக்கும் திருடன் ஒருவன் “நான் ஜெயிலுக்கு வர உன் பையன் தான் காரணம், அவன கொள்ளாம விட மாட்டேன்” என மிரட்டுகிறார். சௌந்தரபாண்டி “என்ன வேற செல்லில் போடு, இல்லனா வெளியே கூட உட்கார்ந்துகிறேன்” எனக் கெஞ்ச, முத்துப்பாண்டி கொஞ்ச நேரம் சும்மா இருப்பா என ஷாக் கொடுக்கிறார். 


அதனைத் தொடர்ந்து இந்தத் திருடன் தான் தப்பை செய்தான் என்று சௌந்தரபாண்டிக்கு பதிலாக கையெழுத்து போட வைக்க பிளான் போடுகின்றனர். இதைப் புரிந்து கொண்டத்துடன் “உங்க அப்பா செஞ்ச தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கணுமா?” என ஸ்டேஷனில் இருந்து தப்பி ஓடுகிறான். 


இதைப் பார்த்து எல்லோரும் ஷாருக்காக, திருடன் போன வேகத்தில் ஜெயிலுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ள பாண்டியம்மா படு மாஸான என்ட்ரி கொடுக்கிறார். இதைப் பார்த்த சௌந்தரபாண்டி என் அக்கா வந்துட்டா டா என சந்தோஷப்படுகிறார். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Cinema Headlines: அயலான் மூன்றாவது பாடல் ரிலீஸ்.. வடக்குப்பட்டி ராமசாமி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சினிமா ரவுண்ட்-அப்!


12th Fail Review: "கல்வியும் நேர்மையும் தான் மனிதனின் அடையாளம்" .. உரக்க பேசிய “12th Fail” படம்.. முழு விமர்சனம் இதோ..!