தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் குடி போதையி‌ல் இருக்க, இசக்கிக்கு முத்துப்பாண்டி “இனிமே உன் வீட்டுக்கு போகக் கூடாது” என்று கண்டிஷன் போட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


சண்முகம் தூங்கிக் கொண்டிருக்க, பக்கத்தில் உட்கார்ந்த பரணி அவனது கையைப் பிடித்துக் கொண்டு “நீ ரொம்ப நல்ல அண்ணன், யாருக்குமே கிடைக்காத அண்ணன். இவ்வளவு நாளா நான் உன்னை புரிஞ்சுக்காம தான் இருந்தேன், ஆனா இப்ப புரிஞ்சுகிட்டேன், இனிமே நாம நல்ல வாழ்க்கை வாழ போறோம், ஐ லவ் யூ” என்று சொல்கிறாள். 


மறுநாள் காலையில் சண்முகம் உடம்பு வலியோட தூங்கி எந்திரிக்க எல்லோரும் குடித்துவிட்டு வந்த விஷயத்தை சொல்லி வருத்தப்பட, “இனிமே தெரிந்தும் தெரியாமலும் சரக்கு அடிக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்கிறான். மேலும் தனக்கு சரக்கு ஊத்தி விட்டவர்களை அடிக்கிறான். 


அடுத்து பாக்கியம் வீட்டுக்கு வந்து “எங்க அந்த குடிகார சண்முகம்?” என்று கேட்க, எல்லோரும் “அவன் தெரியாம ஒரு முறை குடித்து விட்டான்” என்று சண்முகத்துக்கு சப்போர்ட்டாக பேசுகின்றனர். பிறகு “இசக்கிக்கு தாலி பிரிச்சு போடணும், எல்லோரும் வரணும்” என்று சொல்ல, சண்முகம் எப்படி வருவான் பாரு என்று பரணி கோபப்படுகிறாள். 


பாக்கியம் “சண்முகம் வந்து தான் ஆகணும்” என்று சொல்ல, “அப்படின்னா நீயே அவனைக் கூப்பிடு” என்று சொல்ல பாக்கியம் சண்முகத்துக்காக காத்திருக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் உருவாக காரணமான புத்தகம்.. ரகசியத்தை சொன்ன ராஜ்குமார் பெரியசாமி!


18 Years of Thambi: நடிக்க மறுத்த மாதவன்.. திசை மாறிய சீமானின் வாழ்க்கை.. தம்பி படத்தால் வந்த சோதனை