தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியல் இன் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா செம மாஸாக என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது முத்துப்பாண்டியிடம் ஜெயில் செல்லை திறந்து விட சொல்ல வெளியே வரும் சௌந்தரபாண்டி அக்காவை பார்த்து பாசத்தை கொட்டுகிறார். என்னுடைய இந்த நிலைமைக்கு அந்த சண்முகம் தான் காரணம் என்று சொல்ல பாண்டியம்மா இப்ப நான் உனக்கு மூணு வாக்கு தரேன். ஒன்னு அந்த சண்முகம் தர்மகர்த்தா ஆக மாட்டான். 


அடுத்து பரணி கையால் அவன் கட்டிய தாலியை கழட்டி எறிஞ்சிட்டு உன் வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன். மூணாவது ரத்னாவுக்கும் முத்துப்பாண்டிக்கும் கல்யாணம் நடக்கும் என்று கூறுகிறார். பிறகு பாண்டியம்மா அங்கிருந்து கிளம்ப சௌந்தரபாண்டி நானும் வரட்டா என்று கேட்க உன்னையும் கூட்டிட்டு போனா உன்னோட நானும் கலி திண்ண வேண்டியது தான் என்று சொல்கிறார். 


நேராக சண்முகம் வீட்டுக்கு வரும் பாண்டியம்மா பரணியிடம் அவன் கட்டிய தாலியை கழட்டி எறிஞ்சிட்டு வா என்று கூப்பிட இன்னும் 32 நாள்ல வந்துடுவேன் என்று சொல்கிறாள். இன்னும் 32 நாள்ல நீ வரவில்லை என்றால் தாலி அறுத்து பூவை எடுத்து மொட்டை அழிச்சு கூட்டிட்டுப் பாரு என்னை புரியலையா உன் புருஷன் உயிரோடு இருக்க மாட்டான் என்று மிரட்ட சண்முகம் வேல் எடுத்து குத்த வருகிறான். 


ஆனால் பாண்டியம்மா கொஞ்சம் அசராமல் குத்துடா பார்க்கலாம் என்று பேச சண்முகம் திகைத்து நிற்கிறான். அடுத்து பாண்டியம்மா வீட்டுக்கு வர அதை பார்த்து பாக்கியம் பதறுகிறாள். சிவபாலனும் மிரண்டு போய் நிற்கிறான். அடுத்து பாண்டியம்மாவுக்காக முருங்கைக்காய் சாம்பார் எடுத்து வர அதை தூக்கி வீசும் பாண்டியம்மா போய் நாட்டுக்கோழி அடிச்சு குழம்பு வச்சிட்டு வா என்று துரத்தி விடுகிறார். 


பிறகு நாட்டுக்கோழி குழம்பு வைத்து எடுத்து வந்து கொடுக்க அதை சாப்பிட்டுவிட்டு நான் என்ன குழந்தையா காரை எவ்வளவு கம்மியா இருக்கு என திட்டுகிறார். அடுத்ததாக மூன்று வக்கீல்கள் வீட்டிற்கு வருகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: ”உங்க கேமுக்கு என் பெயரையா பயன்படுத்துவீங்க?" அர்ச்சனாவிடம் வினுஷா கேட்ட பளார் கேள்வி!


Bigg Boss Tamil: பி.ஆர் எல்லாம் வேணாம்! பிக்பாஸில் அசால்ட்டாக மக்கள் மனங்களை வென்ற போட்டியாளர்கள்!