தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி ரூமுக்குள் ஷண்முகத்திடம் அவனை காப்பாற்றியதாக சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மனப்பிரம்மையில் ஷண்முகம்:


அதாவது, ஷண்முகம் தூக்கத்தில் இருந்து கண் விழிக்க பக்கத்தில் பரணி படுத்திருப்பதை பார்த்து ஷாக்காகி "நீ என்ன இங்க படுத்து இருக்க" என்று கேட்க அவன் நம்ம புருஷன் பொண்டாட்டி தானே? படுத்தா என்ன தப்பு என நெருங்கி வர பிறகு அது ஷண்முகம் கண்ட கனவு என தெரிய வருகிறது. 


அடுத்து ஷண்முகம் இதே நினைப்பில் இருக்க பரணி தலை குளித்து காபி கொண்டு வந்து கொடுத்து எழுப்ப காபியை குடித்த ஷண்முகம் காபி சூப்பர் என பாராட்ட கடைசியில் அதை குடுத்தது இசக்கி எனவும் அதுவும் காபி கிடையாது டீ என்பதும் தெரிய வருகிறது. ஷண்முகத்திடம் உனக்கு என்ன ஆச்சு அண்ணே என்று கேட்க ஷண்முகம் எல்லாமே மனப்பிரம்மை என்பதை உணர்கிறான். 


நகைகளை வாங்கும் பரணி:


தொடர்ந்து பரணி மற்றும் ரத்னா இருவரும் அடகு கடை ஒன்றிற்கு வந்து நகையை விற்க வேண்டும் என்று சொல்ல கடைக்காரர் சௌந்தரபாண்டி பொண்ணு நீயா நகையை விக்கிற என ஆச்சரியமாக கேட்க யாரா இருந்தால் என்னயா? நகையை வச்சிட்டு பணத்தை கொடு என வாங்கி வருகிறாள். இருந்தாலும் கிளீனிக் தொடங்க இன்னும் 5 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். 


வீட்டிற்கு வந்ததும், சண்முகத்தின் தங்கைகள் அவர்களது நகைகளையும் எடுத்து கொடுக்க பரணி வாங்க மறுக்க, வைகுண்டம் நல்ல விஷயத்துக்காக தானே வாங்கிக்கமா என்று சொல்ல பரணி வாங்கி கொள்கிறாள். சண்முகமும் உதவுவாக சொல்கிறான். நீ அதை கடனாக கூட வச்சிக்க என்று சொல்ல உன்கிட்ட கடன் வாங்குறதுக்கு நான் வெளியவே வாங்கிக்கறேன் என சொல்லி ரத்னாவை கூட்டி கொண்டு வெளியே கிளம்புகிறாள். 


மோசமான கந்து வட்டி காரன் ஒருவனை சந்தித்த பணம் கேட்க வர அவன் சௌந்தரபாண்டி மகள் என தெரிந்ததும் பணத்தை கொடுக்கிறேன் என சொல்லி அனுப்புகிறான். பிறகு கிளீனிக் வைக்க உள்ள பழைய பில்டிங்கிற்கு வந்து அதை எப்படி ரெடி செய்து கிளீனிக் நடத்துவது என திட்டம் போடுகின்றனர். மேலும் கிளினிக்கிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற கேள்வி எழ வெட்டுக்கிளி அண்ணன் ஷண்முகம் பெயரை வைக்கலாம் என்று சொல்ல பரணி கடுப்பாகிகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.