ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் கண்டிப்பாக ஸ்வீட் வாங்கி வர கனி வெட்கப்பட்டு நின்ற நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது சண்முகம் அண்ணன் கிட்ட என்ன வெட்கம் என்று சொல்ல, பரணி “இப்போ அப்படித்தான் கொஞ்சம் வெட்கப்படுவா” என சொல்கிறாள். மறுபக்கம் இசக்கி “பாக்கியத்திடம் எதுக்கு ஜாதகம் எழுத போய் இருப்பதா பொய் சொன்னீங்க?” என்று கேட்க, “பொய் சொல்லல உண்மையாவே கனிக்கு ஜாதகம் எழுதணும்” என சொல்கிறாள்.
“கனிக்கு பிறந்த தேதி தெரியாது. அதனால அவ வயசுக்கு வந்த நேரத்தை வைத்து தான் ஜாதகம் எழுதணும், அதுக்கு ஜோசியரை பார்க்கணும். பரணி கிட்ட அவ வயசுக்கு வந்த டைம் கேட்டுக்கணும்” என சொல்கிறாள்.
மறுபக்கம் சண்முகம் கனிக்கு ஜாதகம் எழுத, வயசுக்கு வந்த நேரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என முயற்சி செய்கிறான். இந்த நிலையில் பரணி "நாளைக்கு கனிக்கு ஜாதகம் எழுத போகணும், போயிட்டு வரலாம்" என்று சொல்ல, "நீ எதுக்கு? அவ வயசுக்கு வந்த நேரத்தை சொல்லி நானும் அப்பாவும் போயிட்டு வரோம்” என சொல்கிறான்.
ஆனால் பரணி “அப்படி எல்லாம் சொல்ல முடியாது, நான் வருவேன், நான் வந்தா தான் அவ வயசுக்கு வந்த நேரம் தெரியும்” என்று ஒரு பேப்பரைக் காட்டி அதை அலமாரியில் வைத்துவிட்டு படுத்து தூங்குகிறாள். பரணி தூங்கியதும் சண்முகம் நைசாக எழுந்து, அந்த பேப்பரை எடுத்துப் பார்க்க, அதில் ஒன்றும் இல்லாமல் இருக்கிறது.
இந்த நேரம் பார்த்து கண்டுபிடிக்கும் பரணி “என்ன.. என்ன விட்டுட்டு போயிடலாம்னு பார்த்தியா? போய் தூங்கு, நாளைக்கு காலையில ஒன்னா போகலாம்” என்று சொல்ல சண்முகம் படுத்துக் கொள்கிறான்.
இங்கே சௌந்தரபாண்டி வீட்டில் இசக்கி படுத்து தூங்கிக் கொண்டிருக்க முத்துப்பாண்டியும் ரத்னாவும் வெங்கடேசன் ஒன்றாக இருந்ததை நினைத்து நினைத்து பார்த்து டென்ஷன் ஆகிறான். தூங்கிக் கொண்டிருக்கும் இசக்கியை அடித்து எழுப்பி “உங்க அக்கா என்னடி அவன் கூட கொஞ்சி கொலாவிட்டு இருக்கா” என கோபப்படுகிறான். இசக்கி “அதுல என்ன இருக்கு? எங்க அக்கா அவரை தான் கட்டிக்க போறா” என்று சொல்கிறாள்.
இதைக் கேட்ட முத்துப்பாண்டி “என்ன கட்டிக்காதவ கழுத்துல எவன் தாலியும் ஏறக்கூடாது” என சொல்ல, இசக்கி “தெரிஞ்சோ தெரியாமலோ என் கழுத்துல தாலி கட்டி இப்போ என்கூட வாழ்ந்துட்டு இருக்க, என் அக்காவோட வாழ்க்கையை கெடுக்கணும்னு நினைச்ச.. உன் குரவளையை கடிச்சு ரத்தத்தைக் குடிச்சிடுவேன்” என்று எச்சரிக்கை கொடுக்க, முத்துப்பாண்டி அதிர்ச்சியில் திருத்திருவென முழிக்கிறான். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.