தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பிளான் போட்டு பாக்கியாவின் மனதை மாற்றி இசக்கியை வீட்டிற்கு அழைத்து வர அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, பாக்கியா இசக்கியை அனுப்ப சொல்ல, வைகுண்டம் மறுப்பு தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி இசக்கியும் “நான் அந்த வீட்டிற்கு வர மாட்டேன், அப்படியே வந்தாலும் உன் பையனுக்கு விஷத்தை வச்சி கொன்னுடுவேன்” என்று சொல்ல பாக்கியா மனவருத்தத்துடன் அங்கிருந்து கிளம்புகிறாள்.
அதன் பிறகு இரவு எல்லாரும் தூங்கியதும் “என்னால் தான் இவ்வளவு பிரச்சனையும் நான் உயிரோடவே இருக்க கூடாது” என்று வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறாள். மறுநாள் காலையில் ரத்னா காபி கொண்டு போக இசக்கி ஆள் இல்லாமல் இருக்க பதறுகிறாள்.
மறுபக்கம் இசக்கி எங்கோ தனியாக நடந்து சென்று கொண்டிருக்க, ரமேஷ் என்பவர் அதைப் பார்த்து சந்தேகம் அடைகிறார். “இந்தப் பொண்ணு தனியா எங்க போகுனு தெரியலையே” என்று ஷண்முகத்திற்கு தகவல் கொடுக்க போன் செய்ய, அவரது போனில் பேலன்ஸ் இல்லை என தெரிய வருகிறது. இசக்கி தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருக்க இப்படியான பரபரப்பான கட்டத்தில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.