Anna Serial: உண்ணாவிரதம் இருந்து உசுப்பேற்றும் பாண்டியம்மா.. ஷண்முகம் எடுத்த முடிவு - அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial Today: சிவபாலன் “அதான் சாப்பாடு வேண்டாம்னு சொல்றாங்களே விட வேண்டியது தானே” என்று சொல்ல, சௌந்தரபாண்டி இருக்கும் கோபத்தில் சிவபாலனைப் போட்டு அடித்து துவைத்து எடுக்கிறார்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா (Anna Serial). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ஷண்முகம்  இசக்கி போட்டோவை எடுத்து வைத்து கொண்டு கண் கலங்க அதை பார்த்து எல்லாரும் பதறிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது ஷண்முகம் அழுவதைப் பார்த்த தங்கைகள் “உனக்காக தான் இந்த போட்டோவை மறைத்து வைத்திருந்தேன்” என்று சொல்ல, “ஏன்லே அப்படி பண்ணீங்க, இசக்கி இந்த குடும்பத்தோட மகாராணி, நமக்காக தான் அவ அங்க போய் கஷ்டப்படுறா” என்று கண் கலங்குகிறான்.

மேலும் “இனிமே என் தங்கச்சிக்கு எதாவது பிரச்னைனா அந்த வீட்ல இருக்குற ஒருத்தரையும் உசுரோட விட மாட்டேன்” என்று சொல்கிறான். மறுபக்கம் பாண்டியம்மா “எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்று அடம் பிடித்து கொண்டிருக்க சௌந்தரபாண்டி சாப்பிட சொல்லி கொண்டிருக்கிறார். 

“அந்த ஷண்முகம் என்ன வந்து மிரட்டிட்டு போறான், உன் பொண்ணு என்னை அறையுற, உன்ன பார்த்தாலே பயந்திட்டு கிடந்த உன் பொண்டாட்டியும் அந்த இசக்கியும் உன்ன மதிக்க கூட மாட்டேங்கறாளுங்க. இதையெல்லாம் பார்த்துட்டு நீ என்ன பண்ண?” என்று கோபப்பட, சௌந்தரபாண்டி “கண்டிப்பா எதாவது பண்றேன் அக்கா” என்று சொல்லி சாப்பிட சொல்ல பாண்டியம்மா விடாமல் பேசி கொண்டிருக்கிறாள். 

உடனே சிவபாலன் “அதான் சாப்பாடு வேண்டாம்னு சொல்றாங்களே விட வேண்டியது தானே” என்று சொல்ல, சௌந்தரபாண்டி இருக்கும் கோபத்தில் சிவபாலனைப் போட்டு அடித்து துவைத்து எடுக்கிறார். பாண்டியம்மா “இவனை அடிக்கிறது பெருசு இல்ல, இதே மாதிரி அந்த சண்முகத்தை அடிக்கணும்” என்று சொல்கிறாள். 

அழுது கொண்டிருக்க பாக்கியம் “என்னால் நீயும் கஷ்டப்படுற” என்று இசக்கியிடம் சொல்ல, அவள் "அண்ணனே வந்து என்னை கூப்பிட்டு இருந்தாலும் நான் உன்னை விட்டு போய் இருக்க மாட்டேன். என் அத்தை இங்க கஷ்டப்படும் போது நான் எப்படி போவேன்?" என்று பாக்கியத்துக்கு ஆறுதலாகப் பேசுகிறாள். மறுபக்கம் அசந்து தூங்கிக் கொண்டிருந்த ஷண்முகம் திடீரென அலறி அழ பரணி என்னாச்சி என்று கேட்கிறாள். 

“அந்த பாண்டியம்மா வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை, அவ அந்த வீட்ல இருக்கக் கூடாது” என்று சொல்ல, பரணி “அவ்வளவு தானே அதுக்கு நான் ஒரு வழி பண்ணுறேன்” என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola