அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதாவை நாகு அவமானப்படுத்தும் நிலையில் கோபத்தில் அன்னம் சண்டைக்கு செல்லும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல் 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.


தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.  


நேற்றைய எபிசோடில் நாகுவும் , பூஜாவும் செந்தில் வீட்டிற்கு வருகின்றனர். மாணிக்கமும், செந்திலும் அவர்களை வரவேற்க பூஜா அமுதாவை தேட,  அவள் கோயிலுக்கு போயிருப்பதாக சொல்கின்றனர். பின்னர் பூஜா அன்னலட்சுமியிடம் பொய் சொல்றது ஒண்ணும் தப்பில்லை என கூறுகிறாள். உடனே நாகு அவளை பார்க்க நீயும் தான் உன் தம்பியை அமுதா அத்தைக்கு கல்யாணம் பண்ணி வைக்க நிறைய தடவை பொய் சொல்லிருக்க என சொல்ல நாகு எரிச்சல் அடைகிறாள்.


இதனையடுத்து மாணிக்கம் செந்திலிடம் உன்னை காப்பாத்த வந்த குலசாமி இவ தாண்டா என சொல்கிறார். அப்போது நாகு அன்னலட்சுமியிடம்  உங்க பையன் வாத்தியார் இல்லேன்னு சொல்றதை என்னால நம்ப முடியலை.. எல்லாத்தையும் பிளான் பண்ணித் தான் பண்ணிருக்கீங்க.. நீங்க தான் இப்படின்னு பார்த்தா, அமுதா கல்யாணத்துக்கு முன்னாலயே உங்க பையனால் கர்ப்பம் ஆயிட்டாளோ தெரியல. அவன் பின்னாலயே ஓடிவந்துட்டா என சொல்ல, அன்னலட்சுமி உச்சக்கட்ட கோபம் ஏற்படுகிறது. 


இதனால் என்னையும் என் பையனையும் என்ன வேணா சொல்லு... ஆனால் என் மருமகளை ஏதாவது சொன்னே அறுத்துருவேன் என கத்தியை நாகு கழுத்தில் வைக்கிறார். பின்னர் அமுதா கோவிலில், செந்தில் காலேஜ்ல போய் படிக்க போறாரு, அதுல எந்த தடையும் இல்லாம நீ தான் பார்த்துக்கணும் என வேண்டுகிறாள்.


இதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் உமா,  நீ நினைச்ச மாதிரி உன் புருஷனை வாத்தியாராக்கலாம்னு பார்க்குறியா என நினைத்துக் கொண்டே  ஆசிரியர் ஒருவருக்கு போன் அடிக்கிறாள். செந்திலுக்கு சீட் கிடைத்த விஷயத்தை தெரிந்து கொண்ட அவர் சரி என்ன பண்ணனும்ன்னு நான் பார்த்துக்குறேன் என தெரிவிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.