அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் செந்தில் அமுதாவிடம் மனம் விட்டு பேசும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
விறுவிறுப்பாக செல்லும் சீரியல்
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.
இன்றைய எபிசோடில் தத்துகொடுக்கும் நிகழ்வுக்கு தம்பதியினராக செல்லும் அமுதா -செந்தில் மாலை மாற்றும் சடங்குகள் செய்கின்றனர். பின்னர் நதியாவிடம் செந்தில் அமுதாவை பற்றியும் தங்கள் காதல் வாழ்க்கையை பற்றியும் சொல்கிறார். அப்போது அமுதா தான் செய்த தவறை மன்னித்து ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சொல்ல அதை அமுதா கேட்கிறாள்.
அப்போது அய்யர் நதியாவுக்காக தத்துவாங்கிய அப்பா அம்மா வேண்டிக்கொண்டு கோவில் மணியடிக்க வேண்டும் என சொல்கிறார். ஆனால் மணி உயரத்தில் கட்டியிருப்பதால் அமுதாவை செந்தில் தூக்க வேண்டும் என மற்றவர்கள் சொல்கிறார்கள். வேறு வழியில்லாமல் செந்தில் தூக்க அமுதா மணியை அடிக்கிறாள். அவளை கீழே இறக்கும் போது தடுமாறி விழப்போக அவளை கட்டிப்பிடிக்கிறான. அப்போது கோவிலுக்கு வரும் சிதம்பரம் அதைப் பார்த்து கோபமாகிறார்.
உமா, பழனி செந்திலை பற்றி தவறாக சிதம்பரத்திடம் ஏற்றி விட சிதம்பரம் இன்னும் கோபமாகிறார். சாமி கும்பிட வரும் இடத்திற்கு செந்தில் எதார்த்தமாக வர அவன் மேல் கோபம் கொள்ளும் சிதம்பரம் அவனை அடித்து தள்ளுகிறார். அப்போது பழனி அவன் வேஷ்டியை காலால் அமுக்கி கொள்ள செந்திலின் வேஷ்டி அவிழ்ந்து விடுகிறது.
இதனால் செந்தில் அவமானப்பட்டு நிற்க அதை அமுதா பார்த்து விடுகிறாள். இதனால் அமுதா கோபத்துடன் வந்து சிதம்பரத்திடம் செந்திலுக்காக சப்போர்ட் பண்ணி கோபமாக பேச அமுதா கையில் இருக்கும் வேஷ்டியை பறித்து செந்திலுக்கு கொடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.