ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா பிராது கொடுத்ததாக தண்டோரா போட பின்னர் பஞ்சாயத்து கூடுகிறது. அன்னலட்சுமி மாயா பஞ்சாயத்தை ஏமாற்றி தங்கள் வீட்டில் இருப்பதாக சொல்கிறாள்.
பஞ்சாயத்தார் ஆதாரம் கேக்க, அமுதா குழந்தையின் அம்மாவுடன் வருகிறாள். அமுதா இந்த அம்மா தான் குழந்தையோட அம்மா என சொல்ல, பஞ்சாயத்தார் அந்த பெண்ணிடம் நான் தான் அம்மா என சொல்ல அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர்.
மாயா, “அவங்க தான் அம்மா ஆனா பெத்த அம்மா நான் தான், நான் நர்ஸ் வேலை பார்க்குறதனால குழந்தையை பார்த்துக்க அவங்களை வேலைக்கு வச்சுகிட்டேன்” என சொல்ல, பஞ்சாயத்தார் அந்த பெண்ணிடம் “மாயா சொல்றது உண்மையா என கேக்க, அந்த பெண் ஆமாம்” என சொல்ல, அமுதா, அன்னம், மாணிக்கம், செந்தில் ஷாக் ஆகின்றனர்.
பழனி பஞ்சாயத்துக்கு வர, ப்ளாஷ் கட்டில் பழனி அந்த பெண்ணை மிரட்டி உண்மையை சொன்னால் குழந்தையை கொன்று விடுவதாக சொல்கிறான். பஞ்சாயத்தார் அமுதாவிடம் “இன்னொரு தடவை தப்பா பிராது குடுத்தா மாயவுக்கும் செந்திலுக்கும் கல்யாணம்” என சொல்ல, அமுதா குழந்தையின் அம்மா வீட்டிற்கு மீண்டும் செல்கிறாள். அந்த பெண் அமுதாவிடம் தன் இரு குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டியதால் வேறு வழி இல்லாமல் பொய் சொன்னதாக சொல்கிறாள்.
இங்கே அன்னலட்சுமி ஜோசியரை வீட்டுக்கு வர வைத்து அமுதாவுக்கும் செந்திலுக்கும் முதல் இரவு நடத்த நேரம் குறித்து குடுக்குமாறு கேட்க, ஜோசியர் இன்றைக்கே நல்ல நாள் என சொல்ல, மாணிக்கம் பூக்கள் வைத்து ரூமை ரெடி பண்ணுகிறார்.
அமுதா வீட்டிற்கு வர அன்னலட்சுமி அமுதாவிடம் உனக்கும் செந்திலுக்கும் இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் என சொல்ல, “நீ தான் என் மருமக, எனக்கு ரெண்டு பேரப் பிள்ளைகளை பெத்துக் குடு” என சொல்ல, அமுதா அத்தை இப்படி பண்ணுனா நாம தோத்து போயிட்டோம்னு அர்த்தம் என சொல்கிறாள். செந்தில் எனக்கு தான் சொந்தம்னு நிரூபிச்ச பிறகு எங்களுக்கு இதை எல்லாம் வச்சிக்க லாம் என சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைந்தது.