ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 


அமுதா “தான் ஏன் படிக்க வேண்டும் என்பதற்காக காரணத்தை சொல்ல வேண்டும்” என பாட்டி கட்டளையிட்டிருந்த நிலையில், கதிரேசன் சொன்ன கதையை அப்படியே சொல்லிய நிலையில், இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாட்டி அமுதாவிடம் “நீ படிக்கலாம், ஆனா நல்ல மருமகளா நடந்துகிட்டு படிக்கலாம்” என சொல்கிறார்.  இதையடுத்து வடிவேலு, ”அன்னமிடம் நம்ம குடும்ப கதையை பல வடிவத்துல சொல்றா, எதை சொன்னாலும் நம்ம குடும்பக்கதையை சொல்லி ஏமாத்துறா, நம்ம விட்டுரக் கூடாது” என ஏத்தி விடுகிறான். 




”அப்பத்தாவை கவுத்துட்டா, அதை எல்லாத்தையும் விட இத்தனை வருஷத்துக்கு அப்புறம் உன் மாமியார் முன்னாடி உன்னை தோற்கடிச்சி அவ நினைச்சதை சாதிக்க போறா, அதை நாம சும்மா விட்டுரலாமா?” என சொல்ல, “பரமு என்னடா செய்யப் போற.. பொறு பொறு, காலைல பார்த்துக்கலாம்” என்று சொல்கிறாள்.


மறுநாள் காலையில் அமுதா கிச்சனுக்குள் நுழைய, அன்னம் தானே பார்த்துக் கொள்வதாகக் கூற, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட பாட்டி இருவரையும் அழைக்கிறார். அன்னம் தனக்கு அமுதா படிப்பதில் இஷ்டம் இல்லை என்று சொல்ல, பாட்டி அப்ப இரு மருகள்களுக்கு இடையில் போட்டி வைக்கலாம் என சொல்கிறார். 




அன்னம், “அமுதா மட்டும் தான் இங்க இருக்கா, இன்னொரு மருமக உண்டாகி அவ அப்பா வீட்டுக்கு போயிருக்கா” என சொல்ல, பாட்டி “அப்ப இந்த வீட்டுல ஒரு மருமக தான் இருக்காளா” எனக் கேள்வி கேட்கிறார். அன்னம் புரியாமல் பார்க்கிறாள். பாட்டி ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொடுத்து பார்க்க சொல்ல, அன்னம் பார்க்க, பாட்டி “அதுல யாரு முகம் தெரியுது? அவ எனக்கு மருமக தான்” என சொல்கிறார். 


பரமுவும் அம்மாவுக்கும் அமுதாவுக்கும் போட்டி வைக்கலாம் என சொல்ல, அன்னம் பரமுவை “என்னை ஏண்டி மாட்டி விட்ட?” என அடிக்கிறாள். பரமு “அவளை நல்ல மருமகளா நடந்துக்க விடாம என்ன பண்ணனுமோ அதை பண்ணுவோம்” என சொல்கிறாள். 


அடுத்ததாக பாட்டி மறுநாள் காலை இருவரையும் அழைத்து முதல் போட்டி கோலப் போட்டி என்று இருவரையும் கோலம் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்கிறார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.