ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.


இந்த சீரியலின் கடந்த வெள்ளி கிழமை எபிசோடில் அமுதாவுக்கு வீட்டை மீட்க 4 ஏக்கர் சொத்தின் டாகுமெண்ட் கிடைத்தது. இந்நிலையில்,  குமரேசன் அதில் தனக்கும் பங்கு இருப்பதாக போலி டாகுமெண்ட்டை காட்டி ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


பழனி குடும்பத்தினர் தங்களுக்கும் இந்த நிலம் தங்களுடையது என பத்திரத்தை நீட்ட, சேட்டு மாணிக்கத்திடம் முதல்ல உங்க பிரச்சனையை முடிச்சிட்டு வாங்க, அப்புறமா நிலத்தை நான் வாங்குறேன் என கிளம்பி செல்ல உமா அமுதாவிடம் உங்களை நல்லாவே இருக்க விட மாட்டோம் நாசமா போயிருவீங்க என திட்ட பழனி மாணிக்கத்திடம் எங்க பத்திரம் ஒரிஜினலான்னு கோர்ட்டுல வச்சு பார்த்துக்கலாம் என்று சவால் விட மாணிக்கம் கோர்ட்டுல கேசை போட்டு எங்களுக்கு பணம் கிடைக்க விடாம இழுத்தடிக்கனும்னு பார்க்குறீல்ல, அது நடக்கவே நடக்காது, நான் இப்பவே ஊர் பஞ்சாயத்தை கூட்டுறேன் என சொல்கிறார்.


அதனை தொடர்நது பஞ்சாயத்து கூட பஞ்சாயத்தார் இரு பத்திரங்களையும் பார்த்துவிட்டு ரெண்டும் ஒண்ணு போல தான் இருக்கு, இதுல யாரோ ஒருத்தருடையது போலி பத்திரம் தான்,  யாருடையது போலின்னு நீங்களே சொல்லிருங்க என்று சொல்ல மாணிக்கம் எங்க குடும்பத்தை பத்தி இந்த பஞ்சாயத்துக்கு நல்லாவே தெரியும், நாங்க தப்பு பண்ணிருப்போமா என எடுத்து சொல்ல பழனி அவங்களுக்கு தான் பணத் தேவை அதனால அவங்க தான் போலி பத்திரத்தை ரெடி பண்ணிருக்காங்க என சொல்கிறான். பஞ்சாயத்தார் இதுக்கு ஒரே தீர்வு தான், அம்மனுக்கு மிளகா அரைச்சி ரெண்டு குடும்பத்தாரும் பூசவேண்டும், யாரு தப்பு பண்ணாங்களோ அவங்க உடம்பு எரியும், அவங்க தான் தப்பு பண்ணவங்க என தீர்ப்பு சொல்கின்றனர்.


பழனி வீட்டில் குமரேசனிடம் உலகமே டிஜிட்டல் மாயமாயிடுச்சு, இப்ப போய் கல்லுல மிளகா அரைச்சி பூசுனா உடம்பு எரியும்னு காமெடி பண்ணிகிட்டிருக்கீங்க..குமரேசன் அவனிடம் நீ கல்லுன்னு நினைக்கிற, அது எவ்வளவு சக்தி வாய்ந்த அம்மன்னு உனக்கு தெரியாது, அந்த அம்மன் என்ன செய்யுதுன்னு பார்ப்போம் என சொல்கிறான்.


அடுத்ததாக அன்னலட்சுமி அமுதாவிடம் இது உங்க மாமாவே நமக்கு இருக்குற இடத்தை காட்டுன பத்திரம், அதனால தைரியமா நீ அம்மனுக்கு மிளகா அரைச்சி பூசு அந்த அம்மனும் உங்க மாமாவும் கூட துணையா இருப்பாக என சொல்கிறாள். இரு குடும்பத்தாரும் கோவிலுக்கு வர அமுதாவும் உமாவும் மிளகாய் அரைத்து எடுத்து வருகின்றனர். இதோடு எபிசோட் முடிகிறது.