Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ (Kizhakku Vaasal) சீரியலில் இன்றைக்கு (ஆகஸ்ட் 26) ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.


கிழக்கு வாசல் சீரியல் 


தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் நடிகை ராதிகா  விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வருகிறது.


இன்றைய எபிசோட் அப்டேட்


தயாளனை தாக்கியதாக போலீஸ் ஷண்முகத்தை கைது செய்த நிலையில், இன்ஸ்பெக்டரிடம் அவர் கெஞ்சி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் உயரதிகாரி சாமியப்பனிடம் நலம் விசாரிக்கிறார். என்னை எப்படி உங்களுக்கு தெரியும் என அவர் குழம்ப, பார்வதி கல்யாணத்தில் தான் கலந்து கொண்டதாகவும், வேலை விஷயமாக சந்தித்திருக்கிறேன் என  சொல்கிறார். என்ன விஷயம் என கேட்டு, தன்னுடைய சிபாரிசில் ஷண்முகத்தை வீட்டுக்கு செல்ல வைக்கிறார். 


வீட்டுக்கு வரும் ஷண்முகத்திடன் நடேசன் சண்டைக்கு செல்கிறார். மாயாவும் அவருடன் இணைந்து ஷண்முகம் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். அவர்களை பார்வதி சமாதானம் செய்ய, விஷயம் அப்படியே ரேணு பக்கம் திரும்புகிறது. ரேணு படிப்பால் தொடங்கியது தான் இவ்வளவு பிரச்சினையும் என நடேசன் சொல்ல, அவரோ நான் வேலைக்கு போய் படிச்சிக்கிறேன் என கூறி பிரச்சினைக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். பார்வதியும் சமாளிக்க அன்றைய நாள் பிரச்சினை முடிவுக்கு வருகிறது.


இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு செல்லும் சாமியப்பன், கடவுளிடம் ரேணு படிப்புக்கு என்ன செய்வது தொடர்பாக வேண்டிக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து கோயிலில் அர்ச்சனை டிக்கெட் கொடுக்கும் வேலை காலியாக உள்ளது தெரிய வருகிறது. இதனை முன்னிட்டு அந்த வேலையில் சேரும் காட்சிகளோடு, அதை சிவகாமி பார்க்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.