ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் செந்தில் அமுதாவிடம் எனக்கு கண்ணு தெரியல என்று சொல்ல, அமுதா பயந்து “என்னங்க சொல்றீங்க, விளையாடாதீங்க” என்று சொல்ல, “உண்மையா தான் அமுதா எனக்கு உண்மையிலேயே கண்ணு தெரியல, நீ இருக்கியா அமுதா?” என்று கேட்கிறான். அமுதா அத்த மாமா என்று கத்த, அனைவரும் வர என்ன ஆச்சு என்னாச்சு என்று கேட்கிறார்கள். “என்னாச்சுனு தெரியலங்க அவருக்கு கண்ணு தெரியலன்னு சொல்றார்” என சொல்கிறாள்.


உடனடியாக செந்திலை அனைவரும் ஆஸ்பிடலுக்கு அழைத்து செல்ல, ஆட்டோவில் வந்து இறங்கி அமுதா, அன்னலட்சுமி, மாணிக்கம் மூவரும் செந்திலை அழைத்துக் கொண்டு போக, அப்போது அதை கவனிக்காமல் மாயா அங்கு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறாள். உள்ளே சென்று டாக்டரிடம் சொல்ல டாக்டர் உடனே கண்ணை செக் செய்து பார்க்கிறார்.


டாக்டர் “தலையில ஆபரேஷன் நடந்ததால் சின்னதா ஒரு கண்ணுக்கு போற நரம்பு ஒன்று டேமேஜ் ஆயிருக்கு, ஒன்னும் பயப்படற மாதிரி இல்ல, டெம்ப்ரரி தான், போகப் போக சரியாயிடும்” என சொல்ல, அப்போது நர்ஸ் ஒருவர் வந்து மாயாவிடம் “மாயா நேற்று நீ அந்த செந்தில் பத்தி கேட்டல்ல அவங்க வந்து இருக்காங்க” என்று சொல்கிறார். 


இங்கே டாக்டர் அமுதாவிடம் “ரெகுலரா கண்ல DROPS விடணும், நான் வேணா ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணட்டா?” என்று கேட்க, அமுதா “வேண்டாம் டாக்டர் நாங்களே பார்த்துகிறோம்” என சொல்ல அப்போது மாயா பார்க்கிறாள். 


செந்திலை பார்த்ததும் அதிர்ச்சியாய் மாயா பார்க்க, ஃப்ளாஷ் கட்டில் நெகட்டிவ் ஷாட்ஸ் போவது செந்தில் அருகே வந்து கிராஸ் ஆகிப்போக, அமுதா இடிக்க, நர்ஸ் திரும்பி அமுதா சாரி மன்னிச்சிடுங்க, தெரியாம பண்ணிட்டேன்” என்று சொல்கிறார். பின் மூவரும் போக மாயா செந்திலை பார்த்தபடி வர அவர்கள் ஆட்டோ ஏறி புறப்பட, மாயாவும் ஒரு ஆட்டோவை பிடித்து கிளம்ப, மாயா செந்திலை மறைந்து இருந்து பார்க்கிறாள்.


பழனி அமுதா வீட்டுக்கு வந்து அமுதாவிடம் “என்னை பிடிச்சி ஜெயில்ல போட்ட, இப்ப ஒண்ணும் இல்லேன்னு வெளியே வந்துட்டேன் பார்த்தியா?” என நக்கல் செய்வது மட்டுமல்லாமல், “உன் புருஷனுக்கு கண்ணு போச்சு, இனிமே எப்படி பாடம் நடத்துவான்” என சொல்ல, “என் வீட்டுக்கு வந்து என்னை தப்பா பேசுற” என அடிக்க போக , தடுமாறி கீழே விழுகிறாள்.


மாயா ஆஸ்பிட்டலுக்கு வந்து தனது தோழியிடம் செந்திலுக்கு என்ன ஆச்சு என கேக்க, நர்ஸ் பைலை நீட்ட, அதைப் பார்த்து மாயா செந்திலுக்கு நடந்தவற்றை பற்றி தெரிந்து கொள்கிறாள். 


செந்தில் அமைதியாக உட்கார்ந்து இருக்க, அமுதா வர “என்ன ஆச்சு, என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று கேட்க, செந்தில் கண்ணில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த அமுதா “ஏங்க என்ன ஆச்சு அழுவுறீங்க?” என்று கேட்கிறாள்.


“என்னால உனக்கு நிறைய பிரச்னை. ஆரம்பத்துல வாத்தியார்ன்னு சொல்லி உன்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில் பாதி நேரத்தை என்ன வாத்தியார் ஆக்குவதற்காகவே கஷ்டப்பட்ட ,நான் வாத்தியாரும் ஆயிட்டேன்.. அப்புறம் ஆசையா நீ படிக்கலாம்னு ஆசைப்படும்போது எனக்கு இந்த மாதிரி அடிபட்டு ஆபரேஷன் பண்ணி கண் பார்வை போச்சு” என்று சொல்கிறான்.


“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க, எனக்கு படிப்பை விட நீங்க, இந்த வீடு, அத்தை, மாமா இதுதாங்க முக்கியம். இதைவிட இந்த உலகத்துல ஒரு பொண்ணுக்கு வேற என்னங்க சந்தோஷம் இருக்க முடியும்” என சொல்கிறாள்.


அதற்கு செந்தில் அவளிடம் “இப்ப புதுசா இந்த வீட்டு பிரச்சினை வேற வந்து இருக்குது, வேண்டாம் அமுதா நம்ம வேற வீட்டுக்கு கூட வாடகைக்கு போய்க்கலாம், இப்ப இருக்குற சூழ்நிலையில் கஷ்டப்பட்டு இதை வாங்கணுமா?” என்று கேட்க “இந்த வீடு என்ன பொறுத்த வரைக்கும் கோயில் அதுக்காக நான் கஷ்டப்படுறது எனக்கு சந்தோஷம் தான்” என சொல்கிறாள்.  இப்படியான சூழலின் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.