ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் செந்தில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, செந்திலின் வீட்டிற்கு வீட்டின் ஓனர் வந்து வீட்டை விக்கலாம்னும் முடிவு பண்ணிட்டேன் என சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர். “வேற யாருக்கோ குடுக்குறதுக்கு நீங்களே வாங்கிக்கோங்களேன்” என சொல்ல, அன்னம் தங்களிடம் அவ்வளவு பணம் இப்போதைக்கு இல்லை என சொல்கிறாள்.


அமுதா அவரிடம் “எங்க மாமா வாழந்த கோயில் இது, எங்களுக்கு கொஞ்சம் டைம் குடுங்க நாங்களே வாங்கிக்கிறோம்” என சொல்ல வீட்டு ஓனர் வெளியே வர, பழனி எதிரே வருகிறான்.


‘உங்க வீட்டை நானே வாங்கிக்கிறேன்’ என சொல்ல ஓனர் அன்னலட்சுமியிடம் வாக்கு குடுத்து விட்டதாக சொல்ல, பழனி அவங்க கிட்ட அவ்வளவு பணம் கிடையாது என சொல்லி, அட்வான்ஸ்சை வாங்கிக்கோ என சொல்லி பணத்தை நீட்டுகிறான். ஓனர் எனக்கு அதெல்லாம் வேண்டாம் என சொல்லிவிட்டு செல்கிறார்.


அதைத் தொடர்ந்து செந்திலுக்கு அமுதா மாத்திரை கொடுக்க செந்தில் அவளிடம் உன் மடியில் படுத்துக் கொள்ள வேண்டுமென சொல்லி அவள் மடியில் படுத்துக் கொள்கிறான்.


அமுதா புத்தகத்தை எடுத்து பேக்கில் வைக்கப் போக, செந்தில் “அமுதா எங்க இருக்க, எனக்கு திடீர்ன்னு கண்ணு தெரியலை” என சொல்ல அமுதா “சும்மா விளையாடாதீங்க” என சொல்ல, செந்தில் தனக்கு உண்மையிலேயே கண் தெரியவிலை என சொல்கிறான் செந்தில்.


இதனால் அமுதா அலறி அடித்தபடி அன்னலட்சுமியையும் மாணிக்கத்தையும் கூப்பிடுகிறாள்‌. இப்படியான பரபரப்பான சூழலில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசொட் நிறைவடைந்தது.