ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் உமா கர்ப்பமாக இருப்பதாக சொல்லி அமுதா குடும்பத்தை விசேஷத்துக்கு அழைத்தாள். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
மாணிக்கம் “அக்கா இது வேணாம்னு தோணுது” என்று சொல்ல செந்திலும் “ஆமாமா இது ஏதோ தேவையில்லாம உள்குத்து மாதிரி தோணுது நம்மள கூட்டி வச்சது அவமானப்படுத்த போறாங்க, ஏதாவது சொல்லுவாங்க” என்று சொல்கிறார்கள். உடனே அமுதா “ஏன் அப்படி நினைக்கிறீங்க? என் தங்கச்சி கர்ப்பமா இருக்கா, சந்தோஷமா இருக்கு. நான் பக்கத்துல கூட இருந்தாலும் சந்தோஷப்படுவா.. இந்த நேரத்துல தர்ம சங்கடமெல்லாம் வேண்டாம்” என்று சொல்கிறாள்.
அன்னலட்சுமி “அமுதா சொல்றது தான் கரெக்ட், போலாம் நல்லபடியா முடியட்டும் என்று சொல்ல, அத்தை நான் ஸ்கூல் போயிட்டு வரேன்” என்று சொல்லி அமுதா அன்னலட்சுமி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு கிளம்பிச் செல்கிறாள்.
அடுத்ததாக பைக்கில் அமுதாவும் செந்திலும் சந்தோஷமாகச் செல்ல அப்போது வழியில் ஒரு கோயிலைப் பார்த்ததும் அமுதா “ஏங்க கொஞ்ச நேரம் நில்லுங்க, நான் கோயில்ல போய் சாமி கும்பிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி கோயிலில் போய் சாமி கும்பிட்டு நன்றி சொல்கிறாள்.
அப்போது திரும்பிப் பார்க்க கதிரேசன் நிற்க அமுதா அவரிடம் “மாமா அத்தை என்னை ஸ்கூலுக்கு போக சொல்லிட்டாங்க. இனிமே சந்தோஷம்தான்” என்று சொல்ல, கதிரேசன் “நல்லா படிக்கணும் என் பேர காப்பாத்தணும், ஊரெல்லாம் கதிரேசனுடைய மருமக கலெக்டர். பெரிய படிப்பு படிச்சவ பெரிய வாத்தியாரு அப்படின்னு பெருமையா பேசணும். அப்பதான் இந்த கதிரேசனுக்கு மரியாதை புரியுதா?” என்று சொல்ல, சரிங்க மாமா என அமுதா சொல்கிறாள்.
அடுத்து செந்தில் பைக்கை பாதி வழியில் நிப்பாட்ட “ஏன் நிப்பாட்டுனீங்க? ஸ்கூல் வர்றதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்குது" என்கிறாள், செந்தில், “இதுக்கு மேல நான் மேத்ஸ் வாத்தியாரு. நீ என் ஸ்டூடண்ட் அதை புரிஞ்சுக்கோ. இதுக்கு மேல பைக்ல போய் ஒன்னா எறங்குனா மத்தவங்க பாத்துட்டு தப்பா நினைப்பாங்க” என்று சொல்கிறான்.
”இதுல என்ன இருக்குது? நீங்க என் புருஷன் தானே?” என்று கேட்க, “அது ஸ்கூலுக்குள்ள யாருக்கும் தெரியாது. நான் வாத்தியார்” என்று சொல்ல, அமுதா “ஓகே ஓகே எனக்கும் புரியுது, நான் கிளம்புறேன் சரி நீ போ” என்று சொல்லி கிளம்ப, திரும்பவும் வந்து ஐ லவ் யூ வாத்தியாரே என்று சொல்கிறாள்.
பதிலுக்கு செந்தில் “ஐ லவ் யூ ஸ்டுடென்ட்” என்று சொல்ல, இருவரும் ரொமான்ஸ் லுக்காக சந்தோஷமாக பிரிய அதைப் பார்த்த பழனியும் உமாவும் “இவங்க சந்தோஷமாக இருக்கக் கூடாது” என்கிறார்கள். பழனி இப்படி சொல்ல “ஆமாங்க இவ படிச்சு மட்டும் பாஸ் ஆகி ஜெயிச்சுட்டானா அந்த ஸ்கூல் நம்மள விட்டுப் போகும். இவ ஜெயிக்கவே கூடாது” என்று சொல்கிறாள். பழனி உமாவிடம் “நாளைக்கு நடக்குற பங்க்ஷன் உனக்காகன்னு நினைக்கிறியா? அமுதாவை வெறுப்பேத்தி அசிங்கப்படுத்தி கேவலப்படுத்ததான்” என சொல்கிறான்.
அதனைத் தொடர்ந்து ஒரு வட்டி கடைக்காரர் வீட்டில் சிதம்பரம் “திடீர்னு பொண்ணு உண்டாயிட்டா. மாப்பிள்ளை வீட்டிலேயே சத்து தண்ணி கொடுக்கணும். கோயில்ல விசேஷத்தை ஏற்பாடு பண்ணிட்டாங்க. பெத்த அப்பனா ஏதாவது செஞ்சே ஆகணும், கையில காசு இல்ல. அதான் கடனா கொடுத்தீங்கன்னா கொஞ்ச நாள்ல திருப்பி கொடுத்துவிடுவேன், தயவுசெய்து இந்த உதவி பண்ணுங்க” என்று சொல்ல. இப்ப உண்மையிலேயே காசு இல்லப்பா சிதம்பரம் என்ன மன்னிச்சிடு என்று சொல்ல, சிதம்பரம் வெளியே வர அப்போது அங்கு வரும் செந்தில் அதைப் பார்த்து விடுகிறான்.
“என்ன மாமா இங்க வந்து வரீங்க” என்று கேட்க, “ஒன்னும் இல்ல மாப்ள, சும்மா பாத்து ரொம்ப நாளாச்சு. பாத்துட்டு போக வந்தேன், நான் வரேன் மாப்ள” என்று சொல்லி அவுட் போக செந்திலுக்கு சின்ன சந்தேகம். “முகத்தைப் பார்த்தால் ஏதோ இது மாதிரி தெரியுதே” என்று சொல்லி வண்டியை நிப்பாட்டி விட்டு உள்ளே சென்று விசாரிக்கிறான்.
வட்டி கடைக்காரர் “சின்னப்பொண்ணு ஏதோ உண்டாகி இருக்காலாமே, ஏதாவது செய்யணும்னு சொல்லி பணம் கேட்டாப்புல. அதான் இல்லன்னு சொல்லிட்டேன்” என்று சொல்ல, “உண்மையிலேயே இல்லைன்னு சொன்னீங்களா? இல்ல ஏதாவது பொய் சொன்னீங்களா” என்று கேட்க, அந்த வட்டி கடைக்காரர் “செந்தில் என்ன மன்னிச்சிடு, சிதம்பரம் எவ்வளவு டைம் எனக்கு பணத்தை கொடுத்து உதவி பண்ணி இருக்காரு, என்கிட்டயும் பணம் இருக்கு.
குடுக்கணும்னு ஆசை, ஆனா சிதம்பரத்துடைய மாப்பிள்ளை அதான் உன் சித்தப்பா பையன் பழனி 10 காசு கூட கொடுக்க கூடாதுனு சொல்லிட்டு போயிட்டாப்புல. மீறி கொடுத்தால் ஏதாவது பிரச்சனை பண்ணுவானு பயத்துல இல்லைன்னு சொல்லிட்ட” என்று சொல்கிறார்.
அடுத்ததாக கோயில் காட்டப்பட, அங்கு பழனி உமா பழனியின் அப்பா அம்மா உள்பட அனைவரும் இருக்க, உமாவின் விசேஷத்திற்கு சொந்தக்காரர்கள் வருகின்றனர்.
கொஞ்ச நேரத்தில் செந்தில் அனைவருடன் வந்து இறங்க குமரேசனும் பழனியும் அவர்களை வன்மமாக பார்க்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.