விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் வித்யா என்ற ரோலில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆண் நண்பருடன் ஆடை இன்றி பேசும் 15 நிமிடம் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ குறித்து விளக்கம் கொடுத்த ஸ்ருதி, இது ஒரு ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ என கூறி இருந்தார். பின்னர் மிகவும் காட்டமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் போட்ட பதிவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ருதியை டார்கெட் செய்து ஃபேக் வீடியோவை வெளியிட்டது யார்? என்ன காரணம் என்று அவர் உரிய விளக்கம் கொடுக்காத நிலையில் அடுத்தடுத்து சில வீடியோக்கள் வெளியானது அதிர்ச்சியின் உச்சம் என கூறலாம்.
இந்த பிரச்சனை ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், இவர் ஹீரோயினாக நடித்த கட்ஸ் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்ருதி நாராயணன் அந்த வீடியோ குறித்து எதுவும் பேசவில்லை என்றாலும் கூட, மீண்டும் ஸ்ருதியின் பிரச்சனை சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறியுள்ளது.
ஸ்ருதி நாராயணின் அந்தரங்க வீடியோ குறித்து பேசிய நடிகை ஷகீலா... அந்த வீடியோவில் இருப்பது நடிகை ஸ்ருதி நாராயணன் தான். அது ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட வீடியோ இல்லை. உண்மையில் அந்த நடிகை தான் அப்படியோரு வீடியோ காலில் பேசியிருக்கிறார். இவ்வளவு நடந்த பிறகும் கூட அந்த வீடியோ காலில் இருக்கும் ஆண் நபர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி அந்த ஆபாச வீடியோ குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை.
இதன் மூலமாகவே நன்கு தெரிகிறது. அந்த நடிகை தான் அப்படியொரு வீடியோவில் பேசியுள்ளார் என்பது. அவர் புகார் கொடுத்தால் தான் யார் லீக் செய்தார் என்கிற உண்மை வெளியே வரும். ஒரு பெண்ணின் வீடியோவை வெளியிட்டது தவறு என்றாலும், அந்த பெண் ஒரு ஆணுடன் இப்படி பேசியதும் மிகப்பெரிய தவறு என கூறியுள்ளார்.