தன்னை யானை தாக்கிய நேரத்தில் ஒருவர் என் மார்பை பிடித்து அழுத்தினார் என பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களான சந்திரலேகா, வம்சம் ஆகியவை மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை சந்தியா ஜாகர்லமுடி. தெரு நாய்களை பாதுகாப்பதை பகுதி நேர பணியாக செய்து வரும் அவர் தற்போது நேர்காணல் ஒன்றில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
அதில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு சீரியல் டைட்டில் பாடல் கோயில் யானை ஒன்றுடன் படமாக்கப்பட்டது. அப்போது அப்போது யானை திடீரென்று கீழே தள்ளிவிட்டு தும்பிக்கையால் என்னை தாக்கியது. இதில் நான் சுயநினைவை இழந்துவிட்டேன். கிட்டதட்ட 8 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சொல்லப்போனால் நான் சாவை பார்த்து விட்டு வந்தேன். நான் அசைவு இல்லாமல் இருந்த நிலையில் உடனிருந்த டான்ஸர்கள் தான் என்னை காப்பாற்றினார்கள்.
அப்போதும் கூட ஒரு டான்ஸர், என் மார்பை பிடித்து அசத்தினார். நான் பிணம் போல் இருக்கும் கூட அந்த டான்ஸர் அப்படி செய்ததை எண்ணி மிகவும் வருத்தப்பட்டதாக சந்தியா கண் கலங்கினார். மேலும் அந்த டான்ஸர் யார் என்றே எனக்கு தெரியாது. என் வாழ்க்கையில் நடந்த இந்த மோசமான சம்பவத்தை நான் இதுவரை எந்த நேர்காணல்களிலும் சொல்லியது இல்லை. இவ்வளவு ஏன் என் அம்மாவிடம் கூட சொல்லியது இல்லை.
காரணம் விலங்குகளைவிட மனிதர்கள் மிகவும் மோசமானவர்களாக இருக்கிறார்கள் அவர்களைப் பார்த்து தான் நாம் பயப்பட வேண்டும். இந்த விபத்தில் எனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சில உறுப்புகள் அகற்றப்பட்டது.
அதன்பிறகு சில நாட்கள் கழித்து ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான குற்றம் நடந்தது என்ன? நிகழ்ச்சியில் இதுகுறித்து விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. மேலும் ஆடையின் நிறம், வாசனை திரவியம் என தொடங்கி மாதவிடாய் நேரத்தில் கோயிலுக்கு சென்றதால் தான் யானை தாக்கியதாக என ஏதேதோ காரணம் சொன்னார்கள். நான் சொன்னால் தானே உண்மை எது, பொய் எது என்று தெரியும் என அந்த நேர்காணலில் சந்தியா கண்ணீர் மல்க பேசியுள்ளார்.