இந்தியாவின் பாரம்பரிய செய்தி குழுமமான ABP நெட்வொர்கின் இந்தி தொலைக்காட்சியான ABP நியூஸ் தொலைக்காட்சி, வட இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பி பார்க்கும் செய்தி தொலைக்காட்சியாக திகழ்கிறது. ஏபிபி நியூஸ் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் க்ரைம் தொடர்பான புல்லட்டின் பலரின் ஆதர்ஷ நிகழ்ச்சியாகும். 


இந்த நிகழ்ச்சியை ஸ்ரீவர்ஷன் த்ரிவேதி என்பவர் தொகுத்து வழங்கி வருகிறார். தொகுத்து வழங்குவது என்றால், ஏதோ இன்று நேற்று அல்ல... கடந்த 17 ஆண்டுகளாக ஸ்ரீவர்ஷன், ஏபிபி நியூஸ் க்ரைம் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இது இதுவரை எந்த தொகுப்பாளரும் நிகழ்த்தாத சாதனை. இந்திய அளவில் அல்ல, உலக அளவில் எந்த நிகழ்ச்சி தொகுப்பாளரும் இத்தனை ஆண்டுகள் ஒரு நிகழச்சியை தொகுத்து வழங்கியதில்லை. 




இந்த 17 வருடத்தில் 6 ஆயிரத்து 100 எபிசோடுகளை தொகுத்து வழங்கியுள்ள ஸ்ரீவர்ஷன் த்ரிவேதியின் இந்த சாதனை, உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது போன்ற ஒரு சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய தொலைக்காட்சி ஏபிபி நியூஸ் தான். அந்த வகையில் ஏபிபி வழியாக அந்த பெருமையை பெறுகிறார் ஸ்ரீவர்ஷன் த்ரிவேதி.






உலகளாவிய இந்த சாதனையை தொடர்ந்து வரும் ஸ்ரீவர்ஷன் த்ரிவேதி, சிறந்த ஊடகவியலாளராக அறியப்படுகிறார். இன்னும் தன் வெற்றி பயணத்தை ஏபிபி நியூஸ் வழியாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீவர்ஷன் த்ரிவேதியை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே உள்ளிட்ட குழுமத்தின் முக்கிய நிர்வாக அதிகாரிகள் பலரும் பாராட்டியுள்ளனர். 


இதோ போல, 2019 ம் ஆண்டு, 5 ஆயிரம் எபிசோடுகளை நிறைவு செய்த தொகுப்பாளர் என்கிற முறையில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார், ஸ்ரீவர்ஷன் த்ரிவேதி. தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்து, மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்து 6 ஆயிரத்து 100 எபிசோடுகளை அவர் எட்டியுள்ளார். 


வட இந்தியாவில் பல நிகழ்ச்சிகளில் பேசும் பொருளாக உள்ள ஸ்ரீவர்ஷன் த்ரிவேதி, பிற தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் அளவிற்கு பிரபலமானவர். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண