Tapsee Pannu : வெற்றிமாறன் மிகவும் சமர்த்தியமானவர்...'ஆடுகளம்' அனுபவம் பற்றி டாப்ஸீ ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாவின் பலதரப்பட்ட ஹீரோயின்கள் இருந்தாலும் ஒரு மாறுபட்ட ஹீரோயின் டாப்ஸீ பண்ணு. வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகமானவர். பல வித்தியாசமான கதைகள், துணிச்சலான நடிப்பு, எதார்த்தமான நடிகையாக இருப்பதால் மற்ற நடிகைகளை காட்டிலும் சற்று மறுதலோடு இருந்ததால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
நான் அப்படி பட்ட ஹீரோயின் அல்ல:
சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது மிகவும் வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்தார் டாப்ஸீ. நீங்கள் படங்களை தேர்வு செய்யும் விதம், ட்ரிக் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் மற்ற நடிகைகளை போல மேக்கப், ஹேர்ஸ்டைல் போன்றவற்றில் அதிக கவனம் நான் செலுத்துவதில்லை. இருப்பினும் 'ஜூடுவா 2' படத்தில் ஒரு ஸ்டைலிஷ் ரோலில் நடித்ததற்கு காரணம் என்னை மக்கள் ஒரு தனி ஸ்லாட்டில் ஒதுக்கிவிட கூடாது என்பதற்காக தான். இப்படி மட்டும் தான் நடிக்க வேண்டும், ரேஃப்ரன்ஸ் பார்த்து நடிப்பது அல்லது ஹோம் ஒர்க் செய்பவள் அல்ல நான். அதை நான் முயற்சி செய்தாலும் என்னால் முழு ஈடுபாடோடு செய்ய முடியாது. இருப்பினும் எனக்கு பிடித்துவிட்டால் நான் நானாகவே அதை இமிடேட் செய்ய ஆரம்பித்து விடுவேன். காமெராவின் முன் நான் என்னை தொலைத்து விடுவேன். அதனால் என்னுடைய தோற்றம், நான் எப்படி மானிட்டரில் பிரதிபலிக்கிறேன் என்பதை பற்றி நான் யோசிப்பதில்லை. என் சிந்தனை எப்படி இருக்கிறதோ என்னுடைய பாடி லாங்குஏஞ்ஜ் எல்லாம் தானாக மாறிவிடும் என்றார் டாப்ஸீ பண்ணு.
ஆடுகளம் 'வெற்றிமாறன்' பற்றி:
இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றாகவே அறிந்திருந்தார் எனக்கு எதுவும் தெரியாது என்று. அதை தனக்கு சாதகமா பயன்படுத்தி கொண்டார். என்னுடைய முதல் சீனில் நான் நடிகர் தனுஷை முதல் முறையாக சந்திக்கிறேன் அப்போது தனுஷை போலீஸ் இழுத்துக்கொண்டு போவார்கள். அப்போது நான் எதுவும் புரியாமல் என்ன நடக்கிறது என்று அதிர்ச்சியில் இருப்பேன். உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. அதனால் என்னுடைய ரீயக்ஷன் அதிர்ச்சியாக தான் இருந்தது. அதை அப்படியே கேமராவில் படம் பிடித்து விட்டார். எப்படி ஒரு சாமர்த்தியம். வெற்றிமாறன் பற்றியும் நான் கேள்விப்பட்டுள்ளேன். அவருடன் நான் மிகவும் அதிகமா பேசியுள்ளேன். இன்றும் அவருடன் தொடர்பில் உள்ளேன். அவரிடம் என்னுடைய படங்கள் குறித்து பேச நான் பயப்படுவேன். வெற்றிமாறன் என்னுடைய 'பிங்க்' திரைப்படத்தை பார்த்து பாராட்டினார். அது எனக்கு ஒரு பெரிய விஷயம். எனக்கு மிக பெரிய அங்கீகாரம் கொடுத்த முதல் இயக்குனர் வெற்றிமாறன் தான். அப்படத்திற்கு 6 தேசிய விருது கிடைத்த பொது அவரிடம் நான் சொன்னேன் இதில் என்னக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவரை இணைந்து பணிபுரிய ஒரு வாய்ப்பை கேட்டுள்ளேன்.
தனுஷிடம் இருந்து கற்றுக்கொண்டது:
தனுஷின் நடிப்பு திறன் பற்றி நான் கூகுள் செய்து பார்த்துளேன். அவருடைய நடிப்பு அசரணமானது. அனைத்தையும் மிகவும் எளிதாக செய்யக்கூடியதில் வல்லவர். அவரின் நடிப்பை பார்த்து நான் நிறைய விஷயங்களை கற்று கொண்டுள்ளேன். நான் எத்தனை டேக் எடுத்தாலும் மிகவும் பொறுமையாக இருப்பார். அவர்கள் இருவரிடமும் இருந்து எவ்வளவு கற்று கொள்ள முடியுமோ அத்தனை விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்றார் டாப்ஸீ பண்ணு.