லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. விஜய் ஜோடியாக திரிஷா நடித்து வரும் இப்படத்தில் கௌதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலி கான்,சஞ்சய் தத், பிரியா ஆனந்த் என மிக பெரிய திரை பட்டாளம் நடித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி  திரையிடப்படும் என அறிவித்துள்ளது. 


 



கிளிபால்:


நடிகர் விஜய் 49வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ம் தேதி லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'நான் ரெடி' பாடலை வெளியிட்டது படக்குழு. விஜய் பாடியுள்ள இப்பாடலில் ராப் பகுதியை பிக் பாஸ் புகழ் அசல் கோளார் பாடியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெட்ரா இந்த பாடலில் விஜய் டான்ஸ் ஸ்டெப்ஸ் வழக்கம் போல அசத்தலாக இருந்தது. விஜய் ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் போட்டு லைக்ஸ்களை அல்லி வருகிறார்கள்.


அந்த வகையில் தான்சானிய உடன்பிறப்புகளான கிளி பால் மற்றும் நீமா பால் இருவரும் விஜயின் 'நான் ரெடி' பாடலுக்கு ஆச்சு அசலாக நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தான்சானியவில் கிராம பிறகுதியை சேர்ந்த கிளி பால் மற்றும் நீமா பால், விஜயின் ஸ்டேப் போட்டதுடன் அனைவரும் வியக்கும் அளவுக்கு லிப் சிங்கும் செய்து அசத்தியுள்ளார். இந்த உடன்பிறப்புகளின் அட்டகாசமான டான்ஸ் மில்லியன் கணக்கான பாலோவர்ஸ்களை குவித்துள்ளது. அவர்களின் சுறுசுறுப்பான டான்ஸ் ஸ்டெப்ஸ் உலகெங்கிலும் உள்ள ஏராளமான ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. தமிழ் ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என சோசியல் மீடியா நட்சத்திரங்களாக பிரபலமாகியுள்ள கிளி மற்றும் நீமா இருவரும் வீடியோ மூலம் அவர்களின் நன்றிகளை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 






போதைப்பொருள் பயன்பாட்டை ஆதரிப்பதாக கூறி 'நான் ரெடி' பாடல் வரிகளுக்கு ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. பின்னர் படக்குழுவினர் பாடல் வரிகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தினாலும் 'நான் ரெடி' பாடல் இன்றும் நம்பர் 1 இடத்திலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.