Irfan: 'பூமிக்கு வந்த தேவதை' : பிரபல யூ ட்யூபர் இர்ஃபானுக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..

தமிழ்நாட்டின் பிரபல யூ டியூபர் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டின் பிரபல யூ டியபர்களில் ஒருவர் இர்ஃபான். முகமது இர்ஃபான் என்ற முழுப்பெயர் கொண்ட உணவு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, பிரபல யூ டியூபராக வளர்ந்தார். இதையடுத்து, யூ டியூப்பில் பல பிரபலங்களை நேர்காணல் செய்து மேலும் பிரபலம் ஆனார்.

Continues below advertisement

இர்ஃபானின் மனைவி கடந்தாண்டு கருத்தரித்தார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இன்று அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், திடீரென அனைத்தும் மாறிவிட்டது. என் இளவரசி, என் பெண் குழந்தை இங்கே உள்ளார்.

"என்ன நல்லது பண்ணிருக்கேனு தெரியல. எனக்கு இப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சுருக்கு. என் மனைவி ஆசிபா நசீருக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்துவேன் என்று தெரியவில்லை. எனது குடும்பம் வளர்ந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

தந்தையாகியுள்ள இர்பானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவருக்கும் ஆசிபா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தை என்ன குழந்தை? என்று அறிவித்தார். அதை வீடியோவாக பதிவிட்டார்.

அவரது இந்த வீடியோவிற்கு பெரும் எதிர்ப்பு உண்டானது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த குழுவிடம் இர்ஃபான் மன்னிப்பு கோரியதால் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த சூழலில், இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ள யூ டியூபர் இர்ஃபானுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola