தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தன்னை அரசியலுக்கு அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன். எனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாததால் நிச்சயம் அரசியல் இறங்க மாட்டேன் என KPY பாலா திட்டவட்டம், பிறருக்கு தான் செய்யும் உதவிகள் தனது திருமணத்திற்கு பின்பும் தொடரும் என KPY பாலா பேட்டியளித்துள்ளார்


சென்னை அடுத்த பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று அடுக்குமாடி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சின்னத்திரை பிரபலம் KPY பாலா கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். அப்போது பெண் முதியவர் ஒருவர் கண்ணீர் மல்க தனக்கு உதவி செய்யுமாறு  பாலாவிடம் கேட்டு மனு அளித்தார். அந்த மனுவினை பெற்றுக்கொண்ட சின்னத்திரை பிரபலம் பாலா அதற்கு தீர்வு காணும் வகையில் தொலைபேசியில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து பேசினார்.


அரசியலில் இறங்க மாட்டேன்


பின்பு செய்தியாளர்களை சந்தித்த KPY பாலா தனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாத காரணத்தினால் தான் அரசியலில் இறங்க மாட்டேன் என கூறினார் மேலும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் உங்களை அரசியலுக்கு அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு நிச்சயம் நான் அரசியலில் இறங்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.


மேலும் தனது சேவைகள் குறித்து சமூக வலைதளங்களில் கூறப்படும் எதிர்மறையான கருத்துக்களுக்கு பதில் அளித்த பாலா தான் தற்போது கூடுதலாக உழைத்து வருவதாகவும் அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே பிறருக்கு உதவி செய்து வருவதாக கூறினார்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது செய்து வரும் மக்கள் பணிகள் தனது திருமணத்திற்கு பின்பும் தொடரும் எனவும் கூறினார். சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.