கூலி (தமிழ்)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. நாகர்ஜூனா , சத்யராஜ் , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , கண்ணா ரவி , உபேந்திரா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிய கூலி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது
கண்ணப்பா (தெலுங்கு)
தெலுங்கில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்ற படம் கண்ணப்பா. முகேஷ் குமார் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால், அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், சப்தகிரி, முகேஷ் ரிஷி, மதுபாலா, ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரம்மாஜி, தேவராஜ், ரகுபாபு, சிவா பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, சுரேகா வாணி, ப்ரீத்தி முகுந்த் அத்ஹுன் அத்ஹுர் அத்ஹுர் அத்ஹுன் வாணி, காஜல் அகர்வால் என பெரும் நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது கண்ணப்பா
சு ஃப்ரம் சோ (கன்னடம்)
அண்மையில் கன்னடத்தில் வெளியாகி பெரியளவில் கவனமீர்த்த திரைப்படம் சு ஃப்ரம் சோ . ராஜ் பி ஷெட்டி தயாரித்து ஷனில் கௌதம், மைம் ராமதாஸ் மற்றும் பிரகாஷ் துமிநாட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய கன்னட படமாக சு ஃப்ரம் சோ திரைப்படம் வெற்றிகண்டுள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.