சினிமாவை தாண்டி மக்களை சிரிக்கவும், ரசிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் ஏராளம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடத்தில் அதிக செல்வாக்கு பெற்றிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பெயர் முகம் தெரியாத பலரும் பிரபலம் அடைந்துள்ளனர். குக் வித் கோமாளி ஹிட் ஷோவாக மாறிய நிலையில், தற்போது 6வது சீசன் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி
கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிகழ்ச்சி கொரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்களுக்கு ஸ்டெர் பஸ்டராக மாறியது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் புகழ், KPY பாலா, ரிஷி ஆகியோர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படியே இருந்தன. குறிப்பாக இதில், சமைப்பவர்களை காட்டிலும் கோமாளிகளாக வருபவர்களுக்கு தரும் டாஸ்க்குகள் தான் மக்களை சிரிக்கை வைத்தது. தஙகளது கவலை மறந்து சிரிக்க வைத்த நிகழ்ச்சியாகவும் மாறியது. தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சி கன்னட மொழிகளிலும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
பிரபலங்கள் என்ட்ரி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் முதல், ராதா வரை பலரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தங்களது திரை அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். அதேபோன்று நடன கலைஞர் பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியின் மூலம் தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்நிகழ்ச்சியில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது.
தெலுங்கிலும் கிராண்ட் ஓபனிங்
தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சி தற்போது தெலுங்கில் Cooku With Jathirathnalu என்ற பெயரில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு மாஸாக தொடங்கியுள்ளது. பிரம்மாண்ட செட்களில் தமிழ்நாட்டை சேர்ந்த சின்னத்திரை பிரபலங்களும் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதில், நடிகை ராதா நடுவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பாபா பாஸ்கர், சிறகடிக்க ஆசை கோமதி ப்ரியா, விஷ்ணுகாந்த், சுஜிதா வித்யூலேகா ராமன் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அதிரடியாக வெளியான ப்ரோமோ
Cooku With Jathirathnalu நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இதன் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்பே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி ப்ரியா செய்யும் அட்ராசிட்டி கலகலப்பை ஏற்படுத்துகிறது.