பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா கடந்த 28ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு பாலிவுட்டை அதிர்ச்சிக்குல்ளாக்கி இருக்கிறது. மேலும் அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது மரணத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

யார் இந்த ஷெபாலி ஜரிவாலா?

கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான காந்தலாகா பாடல் மூலம் பிரபலம் அடைந்தவர் ஷெபாலி. அண்ணாமலை படத்தில் ரஜினி ஒரே பாட்டில் பணக்காரர் ஆவதை போன்று ஒரு பாட்டின் மூலம் ரசிகர்களின் பேரன்பை பெற்றார். இதைத்தொடர்ந்து படங்களில் ஒரு சில படங்களில் நடித்தார். நடிப்பை காட்டிலும் மாடலிங்கில் சிறந்து விளங்கினார். இவரது முதல் திருமணம் வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், 2014ல் நடிகர் பராத் டயாகி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி அவருக்கு இந்திய அளவில் ஒரு அடையாளத்தை காெடுத்தது. 

ஷெபாலி திடீர் மரணம்

கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் பூஜைக்காக ஷெபாலி ஜரிவாலா உண்ணாவிரதம் இருந்துள்ளார். இந்நிலையில், வெறும் வயிற்றில் பல்வேறு மாத்திரைகளை உட்கொண்டது  தான் அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அவரது மரண செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரை பற்றி பல வதந்தி செய்திகளும் பரப்பப்படுகிறது. ஷெபாலியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், தடயவியல் நிபுணர்கள் அவரது வீட்டில் சோதனை செய்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ஷெபாலி பயன்படுத்தும் மருந்துகளை எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

வயதை குறைக்கும் மருந்தால் வந்த ஆபத்து?

நடிகை ஷெபாலியின் வீட்டின் வேலை செய்யும் 8 பேரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். ஆனால், வீட்டில் சண்டையோ, கணவன் மனைவிக்குமான வன்முறையோ நடந்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால், வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மருந்தில் வயதை குறைத்துக்காட்ட பயன்படும் மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் இருந்துள்ளன. மேலும், ஷெபாலி தனது தோல் வெள்ளையாக இருக்க மருந்து எடுத்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இது தவிர ஹார்மோன் மாத்திரைகளையும் அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.  வயதை குறைத்துக் காட்டும் மருந்தை உட்கொண்டதால் தான் அவர் உயிரிிழந்திருக்கக் கூடும் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 திடுக்கிடும் தகவல்கள்

வீட்டில் விரதம் இருந்தபோது மாலையில் ஷெபாலி வயதை குறைக்கும் ஊசியை போட்டுள்ளார். இந்த மருந்துகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவர் பரிந்துரை செய்ததாக தெரிகிறது. அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் இந்த மருந்துகளை ஷெபாலி எடுத்து வந்துள்ளார். இந்த மருந்துகள் தான் ஷெபாலியின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே முழுமையான தகவல் தெரியவரும் என்கின்றனர்.