சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வலம் வரும் நக்‌ஷத்ரா. இவர் தன் மாமியாருடன் 'ஏ சாமி' பாடலுக்கு மரண குத்து குத்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

அவர் வெளியிட்ட அந்த வீடியோ பதிவில், பையன கொடுத்துட்டு, பையன் கையில் போன் கொடுத்துட்டு, பாட்டுபோட சொல்லி, கூடவே ஆடும் மா(மியார்) என்று குறிப்பிட்டுள்ளார். 

 

முன்னதாக, சென்னையில் பிறந்த நக்‌ஷத்ரா நாகேஷ் தன்னுடைய திரைப்பயணத்தை சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தொடங்கினார். தன்னுடைய துறுதுறுப்பான பேச்சினால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் நக்‌ஷத்ரா. ஆங்கரிங்கில் தனது பயணத்தை ஆரம்பித்த இவர், அடுத்ததாக சின்னத்திரை சீரியலிலும் என்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்துவருகிறார்.

இவர், தன்னுடைய பள்ளிப்பருவத்தில் ராகவ் என்பவருடன் நட்புடன் இருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் எப்போது இவர்கள் காதலிக்க ஆரம்பித்தார்கள் என்று தெரியாதாம். இந்நிலையில் கடந்த ஆண்டு ராகவ்தான் தன்னுடைய காதலன் என்று சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததோடு பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இதற்கு சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் வாழ்த்துக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்தனர். நக்‌ஷத்ராவின் காதல் கணவர் ராகவ், மெடிஃபோகஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்ட என்னும் நிறுவனத்தின் இயக்குனர் என்பதோடு,  தியேட்டர்காரன் என்னும் தியேட்டர் நாடக குழுவின் இணை நிறுவனரும் ஆவார்.

தற்போது கடந்த டிசம்பர் மாதம் நக்‌ஷத்ரா நாகேஷ் மற்றும் ராகவ் ஆகியோருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து கடந்த வாரம் புத்தாண்டு கொண்டாட்டத்தை தனது கணவருடன் நக்ஷத்ரா கொண்டாட முடிவு செய்து பாண்டிச்சேரியில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது. 

மேலும் இந்தப் புகைப்படங்களை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள் லைக்குளையும், கமெண்ட்களையும் தெறிக்கவிடுகின்றனர். குறிப்பாக எப்போதும்போல இவர்கள் இதே மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும், வாழ்த்துக்கள் என சோசியல் மீடியாவில் பதிவிட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண