கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாக கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணியானது கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கியது. அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு 2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளுக்கும் அதன் கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவில்லை.




அதிமுகவின் இறுதிகாலக்கட்டத்தில்  கலைமாமணி விருதுகள் மட்டும் வழங்கப்பட்டது. அதன்பின் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறமலேயே இருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் முடிவுற்ற நிலையில் தமிழ்நாடு அரசு அந்த விழாவை நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடத்தி விருதுகள் வழங்கி கலைஞர்களை விருது வழங்கி கௌரவப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,  மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா பாபு ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். 


 






இந்த வகையில் 2014 இல் வெளியான திரைப்படம் தான் பண்ணையாரும் பத்மினியும் வெளியான பொழுது படம் பெரிதும் பெயர் வாங்கவில்லை ஆனால் தற்பொழுது அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக வளம் வந்து வருகிறது . இப்படிப்பட்ட நல்ல கதை இருக்கும் திரைப்படத்தை பாராட்டும் விதமாக 2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில விருதை ஆறு விருதுகளை பெற்றுள்ளது பணையாரும் பத்மினியும். சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது ஜெயப்பிரகாஷிற்கும், சிறந்த துணை நடிகை காண விருது துளசிக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது எஸ்பிபி சரணுக்கும், சிறந்த பின்னணி பாடகி காண விருது பாடகி சந்தியாவிற்கும் கிடைத்துள்ளது அது மட்டுமல்லாமல் 2014 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது இது போன்ற கதைகளை கண்டறிந்து தமிழ்நாடு மாநில விருது வழங்கப்பட்டு வருகிறது.


பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் கதைக்காக அனைவராலும் பேசப்பட்டது. இயக்குனர் அருண்குமார் இந்த படத்தை எழுதியிருந்தார். விஜய் சேதுபதி ,ஐஸ்வர்யா ராஜேஷ் பல திரைப்பட பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரில் ஏற்கனவே வெளியான ஒரு குறும்படத்தின் அடுத்த கட்டமாகவே இந்த முழு நீள படம் உருவாகியது.
உயிர் உள்ளவையோ அல்லது உயிர் அற்றவையோ  ஒவ்வொரு உயிர் அல்லது பொருள் மீதும் நமக்கு ஒரு சென்டிமென்ட் பாசம் இருக்கவே செய்கிறது. இதை மையமாக வைத்து தான் இந்த படத்தின் கதை நகரும் திரைப்படத்திற்கான சரியான அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது அதற்காக விஜய் சேதுபதி தன் டுவிட்டர் பக்கத்தில் ஹேஷ்டேக் தமிழ்நாடு மாநில விருதுகள் மற்றும் நன்றி என்று குறிப்பிட்டு ஒரு ட்வீட் செய்துள்ளார்.