தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விக்னேஷ் சிவன் தாயார் மீனாகுமாரியை பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். 


தமிழ் சினிமாவில்  ‘போடா போடி’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்தப்படம் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றாலும், வணிக ரீதியாக தோல்வியை சந்தித்ததால் அவருக்கு அடுத்தப்படம் கிடைக்க காலதாமதமானது. 


அதனைத்தொடர்ந்து  நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி கால்ஷீட்கள் கிடைத்த நிலையில், அவர்களை வைத்து 
‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இதுமட்டுமல்லாமல் இந்தப்படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதலும் மலர்ந்தது. 


அதனைத்தொடர்ந்து தாங்கள் ஜோடிகளாக சுற்றிவந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த விக்னேஷ் சிவன் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். அதன் படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். 


 






அதனைத்தொடர்ந்து பல இடங்களுக்கு மனைவியோடு சென்று வந்த விக்னேஷ் அண்மையில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக இயக்கி முடித்தார். நயன்தாரா பற்றி பல்வேறு பேட்டிகளில் சிலாகிக்கும் விக்னேஷ் அவ்வப்போது தனது அம்மா மீனாக்குமாரி பற்றியும் பேசுவதுண்டு.


முன்னாள் காவல்துறை அதிகாரியான அவரை மனதில் வைத்துதான் நானும் ரெளடிதான் படத்தில் வந்த ராதிகா கதாபாத்திரத்தை வடிவமைத்ததாக கூறும் விக்னேஷ் சிவன் ஆரம்பம் காலம் முதல் தற்போது வரை தான் விரும்பும் அனைத்து விஷயங்களுக்கு சப்போர்ட்டிவாக இருப்பதாக கூறுவார். 


 






ஏன் அண்மையில் கூட செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடித்தி முடித்தற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் தனது அம்மாவை மேடையேற்றினார். முதல்வர் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்த  மீனாகுமாரி திடீரென கண்கலங்கினார்.


 






இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  மீனாகுமாரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், “ விக்னேஷ் சிவன் அவர்களின் தாய் மீனா குமாரி, காவல் துறையில் எங்களுடன் பணியாறியவர். நாம் எங்கிருந்து புறப்பட்டோம் என்பது பொருட்டல்ல; எங்கே செல்கிறோம் என்பது பெரியது” என்று பதிவிட்டு  இருக்கிறார். இந்தப்பதிவை விக்னேஷ்  சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.