ஒவ்வொரு வருடமும் பொங்கலன்று பல்வேறு படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில் சில படங்கள் வெற்றி பெறுகின்றன. சில படங்கள் தோல்வி அடைகின்றன . 2000 முதல் 2024 ஆம் ஆண்டு வரை பொங்கலன்று வெளியாகி ரேஸில் வெற்றிபெற்ற படங்களைப் பார்க்கலாம்.


2000


ஜனவரி 14 வெளியான படங்கள் : கண்ணுக்குள் நிலவு , திருநெல்வேலி, காதல் ரோஜாவே, வானத்தைப் போல  


வெற்றிபெற்ற படம்  : விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல படம் வெற்றிபெற்றது.


ஜனவரி 15 : எந்த படமும் வெளியாகவில்லை


2001


ஜனவரி 14 வெளியான படங்கள் : தீனா, ஃப்ரெண்ட்ஸ், வாஞ்சிநாதன் , லூட்டி  ஆகிய  


வெற்றிபெற்ற படம்  : தீனா, ஃப்ரண்ட்ஸ் மற்றும்  வாஞ்சிநாதன்  வெற்றிபெற்றது.


ஜனவரி 15 : எந்த படமும் வெளியாகவில்லை


2002


ஜனவரி 14 வெளியான படங்கள் : அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம் , அழகி, ரெட் , விவரமான ஆளு, அழகி 


வெற்றிபெற்ற படம்  : அழகி. ரெட் ஓரளவு வெற்றி பெற்றது.


ஜனவரி 15 : எந்த படமும் வெளியாகவில்லை


2003


ஜனவரி 15 :  வசீகரா, ராமசந்திரா, காலாட்படை, சொக்கத்தங்கம், அன்னை காளிகாம்பாள், அன்பே சிவம், 


வெற்றிபெற்ற படம்  : சொக்கத்தங்கம்


2004


ஜனவரி 14 : விருமாண்டி, புதுகோட்டையிலிருந்து சரவணன், ஜெய் , கோவில் 


வெற்றிபெற்ற படம் : விருமாண்டி மற்றும்  கோவில்  


2005


ஜனவரி 14: ஐயா, ஆயுதம், தேவதையைக் கண்டேன், திருப்பாச்சி


வெற்றிபெற்ற படம்:  தனுஷின் தேவதையைக் கண்டேன் ஒரு பக்கம் வெற்றிபெற, விஜய்யின் திருப்பாச்சி படம் மெகா ஹிட் ஆனது. ஐயா படமும்  ஹிட் ஆனது.


2006


ஜனவரி 14 : சிம்பு நடித்த சரவணா மற்றும் அஜித் நடித்த பரமசிவன் ஆகிய இரு படங்கள் வெளியாகின


வெற்றிபெற்ற படம்  : சரவணா ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்தது. 


ஜனவரி 15 : பாசக்கிளிகள்,  ஆதி


வெற்றிபெற்ற படம்  : இரண்டு படமும் சுமாரான வரவேற்பைப் பெற்றன


2007


ஜனவரி 14 : ஹரி இயக்கிய தாமிரபரணி திரைப்படம் வெளியாகியது. 


 இரண்டு நாட்கள் முன்பாக  போக்கிரி, அஜித் நடித்த ஆழ்வார் வெளியாகின. இதில் போக்கிரி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தாமிரபரணி ஹிட் ஆனது.


2008


ஜனவரி 14 : வாழ்த்துகள், பிரிவோம் சந்திப்போம், பீமா , காளை, பழநி


வெற்றிபெற்ற படங்கள் : எந்த படமும் பெரியளவில் வெற்றிபெறவில்லை


2009


ஜனவரி 14 :  தனுஷ் நடித்த படிக்காதவன். ஜனவரி 14ம் தேதிக்கு இரு தினங்கள் முன்னால் வெளியான விஜய் நடித்த வில்லு படம் தோல்வியை தழுவியது. 


ஜனவரி 15 : பிடிச்சிருக்கு


வெற்றி பெற்ற படம்: படிக்காதவன் மெகா ஹிட் ஆனது


2010


ஜனவரி 14 :  போர்க்களம், நாணயம் , குட்டி, ஆயிரத்தில் ஒருவன்.


வெற்றிபெற்ற படங்கள் : பெரியளவில் எந்த படமும் வெற்றிபெறவில்லை


2011


ஜனவரி 14 :  சிறுத்தை,  ஆடுகளம்.


வெற்றிபெற்ற படங்கள் : சிறுத்தை,  ஆடுகளம்.


ஜனவரி 15 : காவலன் , இளைஞன், சொல்லித்தரவா


வெற்றிபெற்ற படங்கள் : காவலன்


 


2012


ஜனவரி 14 : வேட்டை படம் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. இரண்டு  நாட்கள் முன்பாக விஜய் நடித்த நண்பன் வெளியாகியது


ஜனவரி 15 : மேதை


வெற்றி பெற்ற படம்: நண்பன்


2013


ஜனவரி 14 : விஜயநகரம் , புத்தகம்,  ஆனால் அதற்கு முந்தைய நாட்களில் பொங்கல் வெளியீடாக சமர், கண்ணா லட்டு தின்ன ஆசையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்கள் வெளியாகியது.


வெற்றிபெற்ற படம்: கண்ணா லட்டுதின்ன ஆசையா 


2014


ஜனவரி 14 :  கலவரம், விடியும்வரை பேசு . அதற்கு 4 தினங்கள் முன்னதாகவே அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா படங்கள் வெளியாகியது. 


வெற்றி பெற்ற படம்: வீரம், ஜில்லா


2015


ஜனவரி 14 : ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிபெற்றது.


ஜனவரி 15 : ஜி. வி. பிரகாஷ் நடித்த டார்லிங் மற்றும் விஷால் நடித்த ஆம்பள படம் வெளியாகியது. டார்லிங் வரவேற்பு பெற்றது.


2016


ஜனவரி 14 : தாரை தப்பட்டை, ரஜினி முருகன், கெத்து , கதகளி 


வெற்றிபெற்ற படங்கள் : சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் பெரிய வெற்றி பெற்றது.


2017 


ஜனவரி 14 : பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக படம் வெளியானது. அதற்கு இரு தினங்கள் முன்னதாக விஜய் நடித்த பைரவா படம் பொங்கலுக்கு ரிலீசாகியிருந்தது. 


வெற்றி பெற்ற படம்: பைரவால நல்ல வரவேற்பை பெற்றது


2018


குலேபகாவலி, மதுர வீரன், தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச்  ஆகிய படங்கள் இரண்டு நாட்கள் முன்னதாகவே வெளியானது. ஆனால் எந்த படமும் வெற்றி பெறவில்லை.


2019


2019 ஆண்டு பொங்கலில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித் குமார் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தின. ஆனால் இவை இரண்டும் ஜனவரி 10 ஆம் தேதியே வெளியாகி விட்டது. 


2020


2020 இல் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் முதலில் வெளியாக பின் ஒரு வாரம் கழித்து தனுஷ் நடித்த பட்டாஸ்  படம் வெளியானது. இரண்டு  படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் வர தர்பார் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


2021


2021 ஆம் ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொங்கலாக அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் வெளியாகி திரையரஙகுகளை ஆக்கிரமித்தது. அதே நேரத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் சைலண்டாக வெளியாகியது.


2022


அன்பறிவு, கொம்பு வெச்ச சிங்கமடா, என்ன சொல்ல போகிறாய், நாய் சேகர் ஆகிய நான்கு படஙகள் வெளியாகின. 2022 ஒரு சுமாரான பொங்கல் தான்.


2023


கடந்த ஆண்டு தொடக்கமே அமர்க்களமாக துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரு படமும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன.


2024


இந்த ஆண்டு பொங்கலில் கேப்டன் மில்லர், அயலான் , மிஷன் , மெரி கிறிஸ்துமஸ் என நான்கு படங்கள் வெளியாகின. தற்போது நிலவரப்படி கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படத்திற்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.


குறிப்பு: இதில் சில படங்கள் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் அன்று வெளியாகாமல் அதற்கு முன்னால் பண்டிகை கால படமாக வெளியாகியுள்ளது.