சாதி, மதம் கடந்து ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடும் தமிழர் திருநாள் பண்டிகையான பொங்கல் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


களைகட்டும் பொங்கல்!


ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல் தை மாதம் தான் அறுவடை செய்யப்பட்டு, அறுவடையில் கிடைத்த புத்தரிசி கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும் விவசாயத்துக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாக இன்று கொண்டாடப்படுகிறது. ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இந்த பண்டிகை மகர சங்கராந்தியாகவும்  கொண்டாடப்படுகிறது. 


இந்நிலையில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் என பொங்கல் பண்டிகை வாழ்த்தினை நேரிலும் இணையத்திலும் பகிர்ந்து வருகின்றனர்.


குடும்பத்துடன் கொண்டாடி மகிழும் நடிகர், நடிகையர்


அந்த வகையில் நடிகர் தனுஷ் இணையத்தில் தன் மகன்கள் மற்றும் பெற்றோர் என குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.




வெங்கட் பிரபு அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள், அன்பு மற்றும் மகிழ்ச்சியை அனைவரும் பகிர்வோம். இன்னும் 2 மணி நேரத்தில் நேரத்தில் கோட் பட அப்டேட் வழங்கப்படும்” எனப் பகிர்ந்துள்ளார்.




நடிகர் பிரபுதேவா தன் நண்பர்களுடன் விடியோ பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 


 






வேட்டையன் படக்குழு போஸ்டர் பகிர்ந்து பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளது.




அதேபோல் நடிகர் சரத் குமார் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் இருவரும் தங்கள் மகள் ரேயான் மிதுனுக்கு பொங்கல் சீர் வழங்கும் வகையில் வீடியோ பகிர்ந்துள்ளனர்.


“என் பெற்றோர் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பொங்கல் சீர் தருவார்கள், அவர்கள் தரும் பொருள்களை விட அன்பு தான் மிக முக்கியம்” என ரேயான் பதிவிட்டுள்ளார்.


 






நடிகர் ஜான் கொக்கன் கோயிலில் இருந்து புகைப்படம் பகிர்ந்து “இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!” எனக் கூறியுள்ளார்.




நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் பொங்கல் வைத்து புகைப்படம் பகிர்ந்து தனது வாழ்த்தினைப் பகிர்ந்துள்ளார். மேலும் பல திரைப்பிரபலங்களும் தொடர்ந்து பொங்கல் வாழ்த்துகளை தங்கள் இணைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!